ஆவேசத்தின் உட்சத்தில் பேசி மோடியை கிழித்து தொங்கவிட்ட மம்தா பானர் ஜி

மேற்கு வங்க முதல்வராக மூன்றாவது முறையாக மம்தா பதவியேற்றதிலிருந்தே பரபரப்பாக இயங்கி வருகிறது மேற்கு வங்க அரசியல் களம். பிரதமரின் ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளாதது, தலைமைச் செயலாளரை மத்திய அரசு பணிமாற்றம் செய்தது என தற்போது உச்சக்கட்ட பரபரப்பை எட்டியிருக்கிறது மேற்கு வங்க அரசியல்.மம்தாவை அசைத்துப் பார்க்க மத்திய அரசுத் திட்டம் தீட்டி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக திரிணாமுல் காங்கிரஸார் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வர, தன் அதிரடிகள் மூலம் மத்திய அரசுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார் மம்தா!

யாஸ் புயல் ஏற்படுத்திய பாதிப்புகளை ஆய்வு செய்யக் கடந்த 28-ம் தேதியன்று மேற்கு வங்கம் சென்றார் பிரதமர் மோடி. பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்துக்கு அரை மணி நேரம் தாமதமாக வந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் பிரதமரை மட்டும் தனியாக 15 நிமிடங்கள் சந்தித்துப் பேசினார். பின்னர், வேறு பணிகள் இருப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். மம்தாவின் இந்தச் செயல் பா.ஜ.க-வினரை ஆத்திரமடையச் செய்தது.

மே 31-ம் தேதிக்குள் தலைமைச் செயலாளரை பணியிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மம்தாவோ, “இந்த நெருக்கடியான நேரத்தில் தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது” எனப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பினார். முன்னதாக மே 31-ம் தேதியோடு முடியவிருந்த அலபன் பண்டியோபாத்யாவின் பதவிக்காலத்தை, மம்தாவின் கோரிக்கையை ஏற்று மூன்று மாத காலம் நீட்டித்திருந்தது மத்திய அரசு.

இதற்கிடையில், டெல்லியிலுள்ள பணியாளர் பயிற்சி மையத்தில் மே 31-ம் தேதியன்று பணியில் இணையாத காரணத்தால் அலபன் பண்டியோபாத்யாவுக்கு, மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், தனது அரசுப் பதவியிலிருந்து விலகி இருக்கிறார் அலபன் பண்டியோபாத்யா. பதவி விலகிய அவரை தனது தலைமை ஆலோசகராக நியமித்திருக்கிறார் மம்தா. அலபன், இந்தப் பணியில் மூன்று ஆண்டுக்காலம் நீடிப்பார் என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். இவ்வாறு மோடிக்கு அடி மேல் அடி கொடுத்து வருகிறார் மம்தா பானர் ஜி.

Contact Us