சரத்குமாரின் முதல் மனைவியை பார்த்து இருக்கிறீர்களா.? வைரலாகும் புகைப்படம் இதுதான் !

தமிழ் நடிகர் சரத்குமாரின் மூத்த மகள் வரலட்சுமி சரத்குமார். கடந்த சில வருடங்களாக ஹீரோயினாக நடித்து வருகிறார். மற்ற வாரிசு நடிகைகளைப் போலவே இவருக்கும் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இவருக்கும் மற்ற நடிகைகளுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மற்ற நடிகைகள் ஹீரோயினாக தான் நடிப்பேன் என சில நாட்கள் நடித்து விட்டு பல நாட்கள் மார்க்கெட் இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.ஆனால் வரலட்சுமி சரத்குமார் ஹீரோயினாகவும், குணச்சித்திர நடிகையாகவும் அதே நேரத்தில் வில்லி கதாபாத்திரம் கிடைத்தாலும் தன்னுடைய நடிப்புத் திறனைக் காட்டி அனைவரிடமும் கைதட்டு வாங்கி விடுகிறார்.

அதுமட்டுமில்லாமல் தமிழை விட தற்போது தெலுங்கில் இவருக்கு மவுசு கூடி வருகிறது. தெலுங்கில் வில்லியாகவும் நாயகியாகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார். 2000 ஆம் ஆண்டு சரத்குமார் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு, 2001 ஆம் ஆண்டு ராதிகாவை திருமணம் செய்து கொண்டார். சரத்குமாரின் முதல் மனைவி மற்றும் வரலட்சுமியின் அம்மாவான சாயா தேவியுடன் இருக்கும் செல்பி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Contact Us