‘கொரோனா வார்டுல நைட் டூட்டி முடிச்சிட்டு…’ ‘காலையில வீட்டுக்கு கிளம்ப…’ – ‘கார்’ எடுக்க வந்த ‘டாக்டருக்கு’ காத்திருந்த அதிர்ச்சி…!

ஜம்மு காஷ்மீரின் பதான்கோட் சிவில் மருத்துவமனையில் ஆகாஷ் என்னும் மருத்துவர் கொரோனா வார்டில் பணியாற்றி வருகிறார். டாக்டர் ஆகாஷ் எப்போதும் போல் தனது காரை, மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்தார்.

Pathankot steals 4 wheels car doctor working Corona ward

இந்நிலையில் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல வெளியே வந்த போது தன் காரை பார்த்து அதிர்ந்துள்ளார்.

அவரின் கார் இருக்கிறதே தவிர, காரின் நான்கு சக்கரங்களையும் காணவில்லை. திருடர்கள், சக்கரங்களை கழற்றிவிட்டு அதற்கு பதில் செங்கற்களை அடுக்கி முட்டுக் கொடுத்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்து டாக்டர் ஆகாஷ் கூறும் போது, ‘சிவில் மருத்துவமனையின் கொரோனா தனிமை வார்டில் பணியாற்றி வந்தேன். நான் இரவுப் பணி  ஈடுபட்டு வருவதால், காரை வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு செல்வேன்.

நள்ளிரவு நேரத்தை பயன்படுத்திக் கொண்டு காரின் 4 சக்கரங்களையும் திருடர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரி டாக்டர் ராகேஷ் சர்பால் மூலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்’ எனக் கூறினார்.

Contact Us