திருமண நாள் அன்று சுரபியின் இதயம் நின்று இறந்து போக- தங்கை நிஷா அந்தப் பையனை திருமணம் செய்தார் !

இந்தியாவில் தான் இது போல எல்லாம் நடக்கும்போலா… இந்தியாவில் கடும் கொரோனா பரவலுக்கு மத்தியில் சிறப்பாக ஒரு திருமணம் நடந்து கொண்டு இருந்தது. மண மகன் மாலையை மாற்றிய வேளை, திடீரென மணப்பெண்ணான சுரபிக்கு மாரடைப்பு ஏற்பட்டு, இதயம் நின்றுவிட்டது. மணவறையில் அவர் பிண அறை செல்ல நேர்ந்து விட்டது. ஆனால் எந்த ஒரு காரணத்திற்காகவும் கல்யாணம் தடைப்படக் கூடாது என்று பெண் வீட்டார் சொல்லி விட்டார்கள். அட என்னடா இது ? மண மகள் தான் இறந்து விட்டாரே என்று மாப்பிள்ளை வீட்டார் தலையை பிய்த்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் ..

பெண்ணின் தகப்பன் இறந்த மண மகளின் தங்கை நிஷாவை உடனடியாக அலங்காரம் செய்து அழைத்து வந்து மாப்பிள்ளைக்கு மணம் முடித்து வைத்துள்ளார். மகள் இறந்த சோகம் அங்கே யாருக்கும் இல்லை. மண மகனும் திருஷா இல்லையென்றால் என்ன நயன் தாரா என்பது போல, தாலி கட்டிவிட்டார்.

 

Contact Us