நைட் கிளப்பில் இருந்து தன்னை தூக்கி எறிந்து துரத்திய 55 வயது நபரை காதலன் ஆக்கிய 26 வயது பெண் இவர் தான் !

காதலுக்கு கண் இல்லை என்பார்கள், ஆனால் இங்கே பார்த்தால் காதலுக்கு எதுவுமே இல்லை போல இருகே ? லுரான் கெரி என்னும் 26 வயதுப் பெண், பிரிட்டனில் உள்ள மிடில்ஸ்-பரோவில் வசித்து வருகிறார். அந்தப் பகுதியில் உள்ள ஒரு இரவு நேர கழியாட்ட விடுதிக்கு அவர் செல்வது வழக்கம். ஒரு நாள் அவர் ஓவராக குடித்து விட்டார். தலை கால் தெரியாமல் அவர் அங்கே ஆடத் தொடங்கியதோடு. பலரை வம்புக்கும் இழுத்துள்ளார். இன் நிலையில் 55 வயதாகும் அன்ரனி ஷைலர் என்பவர், பவுன்சராக அங்கே வேலை பார்த்துள்ளார்.

தகராரில் ஈடுபடும் நபர்களை வெளியே இழுத்துச் சென்று விடுவது. அல்லது குண்டுக் கட்டாக தூக்கி வெளியே கடாசுவது இவர் தொழில். அப்படி அன்றைய தினம் தலை கால் தெரியாமல் ஆடிய லுரான கெரியை அவர் வெளியே கொண்டு சென்று விட்டுள்ளார். ஆனால் என்ன அதிசயம் இந்த, கட்டம் இவர்கள் இருவருக்கும் காதல் ஏற்பட ஏதுவாக அமைந்து விட்டதாம். இவர்கள் இருவருக்கும் இடையே 29 வருட வயது வித்தியாசம் இருக்கிறது. ஆனால் இன்றுவரை காதலர்களாக வாழ்ந்து வருகிறார்கள்.

Contact Us