இப்படியொரு பயங்கரமா? பொலிசாரை அதிரவைத்த பெண்; அப்படி என்ன நடந்தது தெரியுமா?

மும்பையில் வசித்து வரும் பெண் ஒருவர் தன் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவரை கொலை செய்து வீட்டில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ரயீஸ் ஷேக் என்பவருக்கு ஷகிதா என்ற பெண்ணுடன் 2012-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பிழைப்புத்தேடி இவர்கள் மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் ஷகிதா கடந்த மே 25-ம் தேதி தாஹிசர் பகுதி காவல்நிலையத்தில் தனது கணவரை காணவில்லை எனப் புகார் தெரிவித்துள்ளார். பணிக்கு சென்ற கணவர் வீடு திரும்பவில்லை அவரை தொடர்புக்கொள்ள முடியவில்லை என அந்தப்புகாரில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

உத்தரப்பிரதேசத்தில் இருந்து மும்பை வந்த ரயீஸ் சகோதரர் அனிஸ் தனது அண்ணியின் பதில்களில் திருப்தியில்லை. அவர் மாறி மாறி பேசுகிறார் என காவல்நிலையத்தில் கூறியுள்ளார்.இதனையடுத்து ஜூன் 1-ம் தேதி காவல்துறையினர் அந்தப்பெண்ணின் வீட்டிற்கு விசாரணைக்கு சென்றுள்ளனர். அவரது வீட்டை சோதனை செய்ததில் சமையலறையில் இருந்த டைல்ஸ்கள் ஒழுங்கான வரிசையில் இல்லை. மேலும் சில டைல்களை அங்கு காணவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்துள்ளனர். தன் ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனை கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார். சமையல் அறையில் உடலை எரித்து அதனை புதைத்து விட்டதாக கூறி அதிர்ச்சி அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “ஷகிதாவுக்கு அதேபகுதியைச் விஷ்வகர்மா என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விபரம் ரயீஸ்-க்கு தெரியவர அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து தனது ஆண் நண்பருடன் சேர்ந்து ரயீஸை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். மே 20-ம் தேதி ரயீஸ் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் காத்திருந்த விஷ்வகர்மா நைலான் கயிற்றைக் கொண்டு ரயீஸை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டில் உள்ள குளியறையில் வைத்து ரயீஸின் உடலை மூன்று துண்டுகளாக வெட்டியுள்ளனர். குழந்தைகள் தூங்கியவுடன் உடலை சமையலறையில் எரித்துள்ளனர். உடல்பாகங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு வீட்டின் உள்ளே புதைத்துள்ளனர்.

நாங்கள் விசாரணைக்கு சென்ற போது அந்த வீட்டின் உள்ளே புதிதாக தளம்போடப்பட்டிருந்தது. டைல்கள் எல்லாம் பெயர்ந்து இருந்தது. இதுகுறித்து அந்தப்பெண்ணிடம் விசாரித்தபோது அமைதியாக இருந்தார். விசாரணைக்கு பின்னர் உண்மையை ஒப்புக்கொண்டார். அந்த தரையை பெயர்த்தபோது பெரிய ஓட்டை ஒன்று இருந்தது. இதனையடுத்து சடலத்தை மீட்டோம். குழந்தையின் கண் எதிரே இந்த கொலை நடந்துள்ளது. வெளியே சொன்னால் உனக்கும் இதேகதிதான் என குழந்தையை மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இருவரையும் கைது செய்துள்ளோம்” என்றனர்.

Contact Us