திருமண கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு; மணமகள் போலீசாரிடம் சிக்கிய சோகம்!

உத்தரபிரதேசத்தின் பிரதாப்கரில் நடந்த திருமண விழாவின் போது அந்த நிகழ்வைக் கொண்டாட்ட துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஒரு மணப்பெண் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெத்வாரா பகுதியில் நடந்த ஒரு திருமண விழாவில் ‘ஜெய் மாலா’ நிகழ்ச்சிக்கு மேடையை அடைவதற்கு முன்பு ரூபா பாண்டே தனது மாமா ராம்வாஸ் பாண்டேவின் உரிமம் பெற்ற ரிவால்வரை கையில் எடுத்து வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸ் சூப்பிரண்டு அசோக் தோமர் தெரிவித்திருந்தார். தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதையடுத்து புலனாய்வுப் போலீசார் அந்த பெண்ணுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் தொற்றுநோய் சட்டம் ஆகியவற்றின் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட ரிவால்வரின் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அந்த வீடியோவில், மணப்பெண் மேடையில் ஏறுவதற்கு முன்பாக ஒரு கையில் துப்பாக்கியை வானத்தை நோக்கி பிடித்த படியும் தன் கணவருடன் மறுகையை கோர்த்தபடியும் இருக்கிறார். இசை ஒலித்து நின்றவுடன் அந்த பெண் காற்றில் துப்பாக்கி சூடு நடத்தினார். பின்னர் மேடையில் ஏறினார்.

வட மாநிலங்களில் திருமண நிகழ்வின் போது துப்பாக்கிசூடு நடத்துவது பல காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதனை தன்டைக்குரிய செயலாக அறிவித்து துப்பாக்கி சூடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்க நடந்த வண்ணம் உள்ளன.

முன்னதாக நாக்பூரில் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வாளால் கேக்குகளை வெட்டியதாக 19 வயது இளைஞரை போலீசார் கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கேக்குகளை வெட்டுவதற்கு வாளைப் பயன்படுத்தியதாக குற்றம் சட்டப்பட்டவரின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வந்ததை அடுத்து நாக்பூர் காவல்துறையின் குற்றப்பிரிவு அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து பார்டி காவல் நிலைய அதிகாரி கூறியதாவது, “குற்றம் சாட்டப்பட்ட நிகில் படேல் கடந்த ஆண்டு அக்டோபர் 21ம் தேதி அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அன்று அதிகாலையில், அவரும் அவரது நண்பர்களும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நான்கு பெரிய கேக்குகளை கொண்டு வந்தனர். படேல் பின்னர் ஒரு வாளை எடுத்து தனது நண்பர்கள் முன்னிலையில் அனைத்து கேக்குகளையும் வெட்டினார்” என்று கூறினார்.

இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக ஊடக தளங்களில் வைரலாகின. அதைத் தொடர்ந்து, குற்றப்பிரிவு அதிகாரிகள் படேலின் வீட்டில் சோதனை நடத்தினர். அதில் அந்த வாளைக் கைப்பற்றியதோடு, அவரைக் கைது செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நபர் மீது ஆயுதச் சட்டம் மற்றும் மும்பை பொலிஸ் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Contact Us