உலகின் முதல் அதிசயம் உருவாகியுள்ளது; அது இதுதான்! வைரலாகும் வீடியோ!

உலகின் முதல் மிதக்கும் மற்றும் வெளிப்படையான நீச்சல் குளம் லண்டனில் திறக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்துள்ளது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தென் மேற்கு பகுதியான நைன் எல்ம்ஸ் பகுதியில் இரு உயரமான கட்டிடங்களின் 10வது தளங்களை இணைத்து அந்தரத்தில் காற்றில் பறக்கும் வகையில் கண்ணாடி போன்று நீச்சல் குளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

‘Sky Pook’ என்றழைக்கப்படும் இந்த நீச்சல் குளம் பக்கவாட்டு பகுதிகள் அனைத்தும் கண்ணாடி போன்ற அமைப்பில் உள்ளது என்பதால் இதில் உள்ளவர்களை வெளியில் இருந்து பார்க்க முடியும், இதே போல உள்ளிருந்தும் வெளியே, கீழே சாலையையும் பார்க்க முடியும்.

தரைமட்டத்தில் இருந்து 115 அடி உயரமாக இரு கட்டடங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் நீச்சல் குளம் 82 அடி நீளம் கொண்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் 35 மீட்டர் தூரத்திற்கு நீந்திச் செல்ல முடிகிறது.

உலகிலேயே இது போன்ற ஒரு நீச்சல் குளம் அமைக்கப்பட்டிருப்பது முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தின் அருகே ஃரூப் டாப் பார் மற்றும் ஸ்பா ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீச்சல் குளம் 50 டன் எடை கொண்ட நீரை தாங்கும் திறன் பெற்றிருப்பதால் பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது.

 எம்பஸி கார்டன் எனும் நிறுவனத்தால் இந்த நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் இதனை Eckersley O’Callaghan என்ற கட்டுமான பொறியாளர் உருவாக்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நீச்சல் குளத்தில் 1.48 லட்சம் லிட்டர் நீர் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பஸி கார்டன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த பறக்கும் நீச்சல் குளம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் ரசித்து பாராட்டி வருகின்றனர். லண்டன்வாசிகள் சிலர் இங்கு வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து ஸ்டேட்டஸ் வைத்து வருகின்றனர்.

Contact Us