ஆரோக்கியமான அம்மா ஆஸ்ரா செனிக்கா எடுத்து இறந்த கதையை மறைத்த பிரிட்டன் அரசு !

 

3 பிள்ளைகளின் அம்மாவான டானியா ஸ்மித் என்னும் 43 வயதுப் பெண், மிகவும் நல்ல ஆரோக்கியமாக இந்து வந்த நிலையில். கடந்த மார்ச் மாதம் அவருக்கு ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசி போடப்பட்டது. இதனை அடுத்து 3வது நாள் அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவர்கள் முதலில் அவை ரத்தக் கட்டிகளின் அறி குறி என்று அறிந்து கொள்ளவில்லை என்று அவரது உற்ற தோழி BBCக்கு தெரிவித்துள்ளார். உண்மைகளை எவ்வளவு காலம் தான் நாம் மறைக்க முடியும் ? எனவே நான் பேசவேண்டிய தருணம் இது என்று அவர் அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். வயிற்று வலியை தொடர்ந்து…

அவருக்கு தலைவலியும் சேர்ந்து வர ஆரம்பித்தவேளை தான் மருத்துவர்கள் ரத்தக் கட்டி தொடர்பாக ஸ்கேன் செய்து பார்த்தார்கள். ஆனால் எனது தோழி பரிதாபமாக இறந்து விட்டார். அவர் மிகவும் நல்ல ஆரோக்கியமாக இருந்தவர். அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை. ஆஸ்ரா செனிக்கா போட்டதே அவர் மரணத்திற்கு காரணம் என்று, பெரும் குண்டு ஒன்றை போட்டு உடைத்துள்ளார் , அவரது தோழி. இந்த TV நிகழ்ச்சி பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. அரசாங்கம் எந்த அளவுக்கு பல செய்திகளை மறைத்து வருகிறது என்பதனை இது காட்டுவதாக அமைந்துள்ளது.

மேலும் சொல்லப் போனால் ரத்தக் கட்டிகள் ஏற்படும் போது, தலையில் மட்டும் தான் வலி இருக்கும் என்பதும் உண்மைக்கு புறம்பான விடையம். ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசியை எடுத்து , 2 வாரங்களுக்குள் உங்கள் உடல் நிலையில் ஏதாவது சிறிய மாற்றம் இருந்தால் கூட, உடனே மருத்துவரை நாடுவது நல்லது. அது பக்க விளைவுகளாக இருக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது. இந்த ரத்தக் கட்டிகள், உடலில் பல பாகங்களில் ஏற்படக் கூடும். நாம் ஏற்கனவே ஒரு செய்தியை வெளியிட்டு இருந்தோம். லண்டனில் தமிழருக்கு காலில் ரத்தக் கட்டி ஏற்பட்டது என்று. இவை கைகளை கூட தாக்கலாம். எனவே ஜாக்கிரதை தமிழர்களே.  உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பகிருங்கள்.

Contact Us