திடீரென வந்த பார்சல்’… ‘அத திறந்து பாத்தா’… ‘பெரிய சதி இருக்கு’… மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ள நித்தியானந்தா!

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சாமியார் நித்தியானந்தா தற்போது எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

Nithyananda released new video about kailasa

திருவண்ணாமலையைச் சேர்ந்த   நித்தியானந்தா   சாமியார் பெங்களூரில் ஆசிரமம் நடத்திப் புகழ் பெற்றார். பின்னர் அவர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அதனை எதிர்கொண்டு வந்த அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கைலாசா நாட்டை தான் உருவாக்கி இருப்பதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டார்.

Nithyananda released new video about kailasa

அதேநேரத்தில் அவர் குறிப்பிடும் கைலாசா நாடு எங்கு இருக்கிறது, என்ற விவரம் கூட யாருக்கும் தெரியவில்லை. ஆனால் நான் கைலாசாவில் இருந்து பேசுகிறேன் என்ற ரீதியில் நித்தியானந்தா பல வீடியோகளை வெளியிட்டு வருகிறார். ஒரு கட்டத்தில் கைலாசாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வெப்சைட் முகவரியையும் வெளியிட்டார்.

அதைப் பார்த்த இளைஞர் ஒருவர், அங்கு ஹோட்டல் தொடங்க வேண்டும் என விண்ணப்பம் செய்து ஷாக் கொடுத்தார். இந்நிலையில் கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளதாகக் கூறி சில நாணயங்களையும்   நித்தியானந்தா   வெளியிட்டார். பல்வேறு நாடுகளுடன் வர்த்தகத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்து இருந்தார்.

Nithyananda released new video about kailasa

இப்படி கைலாசா நாடு பற்றி புதிது புதிதாக பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன. அந்த வகையில் தற்போது நித்தியானந்தா தெரிவித்துள்ள கருத்து மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ”கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்குச் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நித்தியானந்தா திடுக்கிடும் குற்றச்சாட்டைக் கூறி உள்ளார்.

கைலாசா நாட்டின் மீது ‘பயோ வார் தொடங்கப்பட்டுள்ளது. நாங்கள் கேட்காமலேயே எங்களுக்கு வந்த பார்சலில் மர்ம விதை களை அனுப்பி வைத்துள்ளனர். தன்னை பல பேர் பல்வேறு வழிகளில் தாக்கியதாலேயே இந்தியாவை விட்டு வெளியேறிவிட்டேன். சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாகப் பயங்கரவாதத்தை விதைகள் மூலம் அனுப்பும் கொடிய சதி நடக்கிறது” என நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.

Nithyananda released new video about kailasa

இதற்கிடையே உண்மையிலேயே கைலாசா என்று ஒரு நாடு உள்ளதா? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நித்தியானந்தா எங்கிருந்து வீடியோ வெளியிடுகிறார் என்ற மர்மம் விலகினால் மட்டுமே இதற்குப் பதில் கிடைக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Contact Us