ஃப்ரீயா ‘பீர்’ தருவோம்…! ‘அதுக்கு நீங்க பண்ண வேண்டியது ஒண்ணே ஒண்ணு தான்…’ – இன்னும் ‘பல சலுகைகளை’ அறிவித்துள்ள அமெரிக்கா…!

அமெரிக்காவின் சுதந்திர தினதிற்கு முன்பு 70% மக்கள் கொரோனா தடுப்பூசி போட பல அதிரடி ஆச்சரிய அறிவிப்புகளை அறிவித்துள்ளது.

us Free beer wishes of the person being vaccinated

கொரோனாவின் முதல் அலையில் படாதப்பாடுப்பட்டது என்று தான் சொல்லவேண்டும். உலகளவில் தொற்று பரவும் விதத்திலும், பலி எண்ணிக்கையிலும் அதிகமாக இருந்தது.

அதன்பின் அமெரிக்காவில் அரசியலமைப்பு மாற்றத்திற்கு பிறகு, கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தீவிரமாக்கப்பட்டது. இதுவரை அமெரிக்காவில் 21 வயதிற்கு மேற்பட்டவர்களில் குறைந்தது 63%பேர் தான் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.

அதோடு வரும் ஜூலை 4-ம் தேதி அமெரிக்க சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், அதற்குள் 70% பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட அதிபர் பைடன் திட்டமிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் நாடு முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Contact Us