3 வருசத்துக்கு முன்னாடியே ‘ட்வீட்’ செய்திருந்த எலான் மஸ்க்.. அதிரடி நடவடிக்கை!

பிரபல டெஸ்லா நிறுவனம் புதிதாக ஒரு தொழிலில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Elon Musk files trademark paperwork for Tesla restaurant concept

அமெரிக்கவை சேர்ந்த டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உணவகம் சார்ந்த தொழிலில் ஈடுபட ஆர்வம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. டிரைவ்-இன் ரெஸ்டாரண்ட் வகையில் இந்த வணிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக மின்சார கார்களை சார்ஜ் செய்யும் டெஸ்லாவின் சூப்பர் சார்ஜர் அமைவிடங்களில் இந்த உணவங்கள் அமைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Elon Musk files trademark paperwork for Tesla restaurant concept

இதற்கான பணிகளை டெஸ்லா நிறுவனம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உணவகம் அமைப்பதற்கான அனுமதி வேண்டி சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் டெஸ்லா நிறுவனம் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. டெஸ்லா நிறுவனத்தின் ‘T’ என்ற குறியீட்டை வைத்து தான் இந்த தொழிலை துவங்க உள்ளதாக அமெரிக்க பத்திரிகை நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Elon Musk files trademark paperwork for Tesla restaurant concept

மூன்று வருடத்திற்கு முன்பே இதுகுறித்து எலான் மஸ்க் ஒரு ட்வீட்டும் செய்துள்ளார். 25,000 சூப்பர் சார்ஜர் லொக்கேஷன்களை கொண்டுள்ள டெஸ்லா நிறுவனம், இந்த உணவங்களை ஃபுட் செயின் பிஸினஸ் போல் முன்னின்று நடத்த வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

Contact Us