மாஸ்க்’ போடாமல் நின்றுக்கொண்டிருந்த தம்பதி…! ‘அவங்கள பார்த்த உடனே காரை நிறுத்த சொல்லி…’ – முதல்வர் ஸ்டாலின் செய்த காரியம்…!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2-வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

MK Stalin saw a man not wearing a mask on the road

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து பொதுமக்கள் மாஸ்க் அணிவது குறித்தான முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்திவருகிறார். எப்படி மாஸ்க் அணிவது என தெளிவாக விளக்கி ஒரு வீடியோவையும் வெளியிட்டார். மேலும், திரைப் பிரபலங்கள் மூலமாக மாஸ்க் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும் வீடியோ வெளியிடப்பட்டது.

இந் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருடைய தொகுதியான கொளத்தூரில் கொரோனா நிவாரண பணிகள் குறித்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். நிகழ்ச்சி முடிந்தபின்னர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு செல்லும்போது அவரைப் பார்க்க ஏராளமான மக்கள் சாலையில் இரு பக்கமும் நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது வயதான தம்பதியினர் இருவர் மாஸ்க் அணியாமல் இருந்ததைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் காரை உடனடியாக நிறுத்தச் சொல்லி இறங்கியுள்ளார். அந்த தம்பதியிடம் முதலில் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் மாஸ்க் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறி, சில முகக் கவசங்களை கொடுத்து அணிந்து கொள்ளுமாறு வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

Contact Us