ஒரு சூரியன் வெடிப்பதை முதன் முறையாக விஞ்ஞானிகள் வீடியோ எடுத்துள்ளார்கள்

அண்ட வெளியில் மில்லியன் கணக்கான நட்சத்திரங்கள் எரிந்து கொண்டு இருகிறது. அவைகளில் சில எரிந்து முடிந்து கருகிய அல்லது அணைந்து போன கிரகமாக மாறி பின்னர் ஒரு கட்டத்தில் வெடிக்கிறது. இந்த வெடிப்பானது அண்ட வெளியில் நடக்கும் மிகப் பிரம்மாண்டமான வெடிப்பு ஆகும். ஒரு சூரியன் பல மில்லியன் ஆண்டுகள் வரை எரிய வல்லது. இதன் காரணத்தால் அணையும் சூரியனைப் பார்ப்பது என்பது மிகக் கடுமையான விடையம். ஆனால் பூமியில் இருந்து, மில்லியன் அல்ல பில்லியன் ஒளியாண்டுக்கு அப்பால் உள்ள ஒரு அணைந்து போன சூரியன் வெடித்துள்ளதை, விஞ்ஞானிகள் சம காலத்தில் வீடியோவாக எடுத்துள்ளார்கள். அதனை இங்கே இணைத்துள்ளோம்.

எமது சூரியனும் ஒரு நாள் எரிந்து முடிந்து நின்று விடும். அது மட்டும் அல்ல அது வெடித்து கருவளையமாக மாறி அருகில் உள்ள பல கிரகங்களை உள்ளே இழுத்து விடும். அந்த இடைவெளிக்குள் தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த சிறிய இடைவெளியில் தான், காணிப் பிரச்சனை, இனவெறி, ஏமாற்று வேலை, போர் என்று அனைத்தும் நடக்கிறது. இதனை நன்றாக உணர்ந்தவர்கள் ஞானியாக எப்பொழுதும் அமைதியாக இருப்பார்கள். ஏனில் வாழ்க்கை என்பது மிக மிக குறைந்த காலம். வாழும் போதே அதனை அனுபவிக்க வேண்டும்.

Contact Us