முதல்வரின் நிவாரண நிதி…. ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த பாரதிராஜா, சீமான்

தமிழகத்தின் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தமிழகத்தில் கொரோனா பொது நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலின் திரட்டி வருகிறார். அவருக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் இன்று தலைமைச்செயலகத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உடன் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த இயக்குனர் பாரதிராஜா 5 லட்சம் நிதியுதவி வழங்கினார். அவருடன் சென்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.

 

Contact Us