தம்பி தலைவருக்கு இது சரியா இருக்காது, தலைக்கு தான் சரியா இருக்கும்.. விஷயத்தை உடைத்த டிடி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்களின் ஆதரவால் கோடிக்கணக்கில் வசூல் பெற்று சாதனை படைத்து வருகின்றனர். மற்ற நடிகர்களை போல அஜித் இல்லாமல் தனக்கு நம்பிக்கை கொடுக்கும் நபர்களின் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் நேர்கொண்டபார்வை. இப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த வெற்றியை பதிவு செய்யாமல் குடும்பப்பாங்கான ரசிகர்களை மட்டும் திருப்தி படுத்தியது அதற்கு காரணம் இப்படத்தில் எந்த ஒரு மாஸ் காட்சியிலும் தல அஜித் நடிக்க வில்லை என்பதுதான்.

ஆனால் சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு வந்தனர். அதற்கு படக்குழு எந்த ஒரு அறிவிப்பு வெளியிடாமல் விரைவில் படத்தின் அப்டேட் வெளியாகும் என பல தரப்பினர் அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

தொகுப்பாளினி திவ்யதர்ஷினி டிடி இடம் தொகுப்பாளர் ஒருவர் காப்பு கட்டி இது யாருக்கு சரியாக இருக்கும் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு டிடி காப்பு என்றால் அது தலைக்கு தான் பொருத்தமாக இருக்கும் மேலும் என்னை அறிந்தால் படத்தில் தல அஜித் வெள்ளை சட்டை போட்டு காப்பு போட்டால் வேற லெவல் இருக்கும் என பதிலளித்துள்ளார்.

 

Contact Us