சார், அந்த பக்கம் போகாதீங்க’… ‘தலை தெறிக்க பைக்கில் வந்த இளைஞர்கள்’… ‘சாலையில் ரேம்ப் வாக் போட்ட புலிகள்’… கிலியை ஏற்படுத்தும் வீடியோ!

சாலையில் நடந்து சென்ற புலியால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.

Video : Bikers block path of tigers in Maharashtra

கொரோனா பரவல் காரணமாகப் பல மாநிலங்களில் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் வனப் பகுதியை ஒட்டிய சாலைகளில் வாகன போக்குவரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் வனப் பகுதியில் உள்ள வன விலங்குகள் சர்வ சாதாரணமாக அந்த சாலைகளிலும், அதனை ஒட்டியுள்ள கிராமங்களுக்கும் வருவது வாடிக்கையாக உள்ளது.

Video : Bikers block path of tigers in Maharashtra

அந்த வகையில் மகாராஷ்டிராவில் உள்ள தடோபா அந்தாரி புலிகள் காப்பக சாலையில் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருக்கும்போது இரண்டு புலிகள் நின்றுகொண்டிருந்தன. இதனைப் பார்த்த வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்து போனார்கள். சாலையில் நடந்து சென்ற புலிகள் சிறிது தூரம் நடப்பதும், பின்னர் அப்படியே நிற்பதுமாக இருந்தது.

Video : Bikers block path of tigers in Maharashtra

இதனை அந்த பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Contact Us