என் பிள்ளைக்கு இது மறுபிறவி’…. மொத்த குடும்பத்துக்கும் குல சாமியான கேரள தொழிலதிபர்!

ஐக்கிய அரபு எமிரேட்டில் மரண தண்டனையிலிருந்து இந்திய இளைஞரைக் கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lulu’s Yusuffali pays Rs 1 cr money to save Indian man on death Row

ஐக்கிய அரபு எமிரேட்சில்  கேரளாவைச் சேர்ந்த  பெக்ஸ் கிருஷ்ணன் என்பவர் வேலை செய்து வந்துள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு  சாலையில் காரில் சென்று கொண்டிருந்த நேரத்தில், சூடான் நாட்டை சேர்ந்த சிறுவன் ஒருவன் மீது கார் மோதியதில் அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இவை அனைத்தும் அங்குப் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானது.

Lulu’s Yusuffali pays Rs 1 cr money to save Indian man on death Row

இதையடுத்து பெக்ஸ் கிருஷ்ணன் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பெக்ஸ் கிருஷ்ணனைக் காப்பாற்ற அவரது உறவினர்களும், நண்பர்களும் முயற்சி செய்தனர் ஆனால் முடியவில்லை இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பம் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்டை  விட்டு வெளியேறி மீண்டும் சூடானுக்கு இடம் பெயர்ந்தது, இதனால் எந்தவொரு  மன்னிப்பும் கேட்க முடிய வில்லை .

Lulu’s Yusuffali pays Rs 1 cr money to save Indian man on death Row

இதைத் தொடர்ந்து பின்னர் கிருஷ்ணன் குடும்பத்தினர்   தொழில் அதிகர் யூசுப் அலியை அணுகினர். அதோடு ஜனவரியில், சூடானில் பாதிக்கப்பட்டவரின் குடும்பம் கிருஷ்ணனுக்கு மன்னிப்பு வழங்க ஒப்புக்கொண்டது. இதனையடுத்து, கவனக்குறைவால் நடந்த இந்த விபத்தில் அந்த சிறுவனின் குடும்பமும் மன்னிக்கச் சம்மதித்த நிலையில்,  கிருஷ்ணனின் விடுதலையைப் பெறுவதற்காக யூசுப் அலி  நீதிமன்றத்தில் 500,000 திர்ஹாம் (தோராயமாக ரூ. ஒரு கோடி) இழப்பீடாக வழங்கியுள்ளார்.

Lulu’s Yusuffali pays Rs 1 cr money to save Indian man on death Row

இதற்கிடையே அபுதாபியில் உள்ள அல் வாட்பா சிறையில் உள்ள  பெக்ஸ் கிருஷ்ணன் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் பேசும் போது இது எனக்கு ஒரு மறுபிறப்பு. எனது குடும்பத்தைச் சந்திக்கப்  பறப்பதற்கு முன்பு ஒரு முறை யூசுப் அலியைப் பார்க்க வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை என்று கூறி உள்ளார். மகனின் விடுதலையை அறிந்த அவரது குடும்பம் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியுள்ளது.

Contact Us