லண்டன் Holiday- INN ஹோடல் வாசலில் இடுப்பில் இருந்து விழுந்த துப்பாக்கி- பெரும் படை எடுத்த பொலிசார் !

லண்டனில் உள்ள ஸ்ராட்ஃபேட் ரயில் நிலையம் அருகில் உள்ள, ஹாலிடே இன் ஹோட்டல் வாசலில் ஒரு நபர் உள்ளே நுளையும் போது. அவர் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கை துப்பாக்கி தவறி கீழே விழுந்து விட்டது. இதனை பார்த்த ரிசெப்ஷனில் இருந்த பெண் பெரும் பதற்றமடைந்தார். மேலும் குறித்த நபர் தாடியோடு இருந்ததை அவதானித்த பெண் அவர் முஸ்லீம் தீவிரவாதி தான் என்று நினைத்து உடனே பொலிசாருக்கு அழைப்பை விடுத்தார். சற்று நேரத்தில் 20க்கு அதிகமான ஆயுதம் தாங்கிய பொலிசார் மற்றும், டாட்டிகள் யூனிட் என்று அழைக்கப்படும், பொலிசார் குழுவும் அந்த ஹோட்டலை முற்றுகையிட்டார்கள்.. ஆனால் அந்த நபரை கைது செய்தவேளை.

அது BB துப்பாக்கி என்பது தெரிந்துள்ளது. அதாவது அது ஏர் BB துப்பாக்கி ஆகும். அதில் குண்டுகள் இல்லை வெறும் ஈயக் குண்டு தான் இருக்கும் சுமார் 20 மீட்டர் வரை செல்லக் கூடிய டம்மி துப்பாக்கி என்பது பின்னர் தான் கண்டு பிடிக்கப்பட்டது.

Contact Us