பறக்கும் தட்டுகள் பின்னணியில் சீனா..? ரகசிய தகவல் வெளியானது..!!

அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கையில், பறக்கும் தட்டுகளுக்கும் வேற்றுக்கிரக வாசிகளுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று உறுதி செய்திருக்கிறார்கள். மேலும் சீனா அல்லது ரஷ்யா போன்ற நாட்டின் புது ஆயுதமாக பறக்கும் தட்டுகள் இருக்கலாம். எனினும் அவை நிச்சயம் அமெரிக்காவின் திட்டம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையின் விமானிகள் கடந்த 20 வருடங்களில் சுமார் 120 பறக்கும் தட்டுகளை சந்தித்துள்ளார்கள்.

அதன்படி, பறக்கும் தட்டுகள் விவரிக்க முடியாத வகையில் நகர்ந்து செல்வதும், காணாமல் போவதும், வேறு பாதையில் மாறுவதையும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இவை ரஷ்யா அல்லது சீனாவின் ஹைபர்சோனிக் தொழில்நுட்பமாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 4000 மைல்கள் செல்லக்கூடியது என்று நிபுணர்கள் விவரித்துள்ளார்கள்.

அதாவது அதனை இடையில் நிறுத்துவது நடைபெறாத ஒன்று என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்க சிறப்பு நிபுணர்கள் குழுவினர், பறக்கும் தட்டுகள் குறித்து உருவாக்கிய இந்த அறிக்கை வரும் ஜூன் 25ஆம் தேதி என்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். எனினும் சீனா மற்றும் ரஷ்யா பறக்கும் தட்டுகள் தொடர்பில் இருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவித்திருந்தாலும், அதற்குரிய ஆதாரங்களை வெளிப்படுத்துவார்களா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

Contact Us