தன் திருமணத்துக்குப் பொலிஸ் பாதுகாப்பு கேட்கும் தலித் இளைஞன்; பின்னணியில் அதிர்ச்சிக் காரணம்!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு நபர் தன் திருணமத்துக்குப் போலீஸ் பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுள்ளார்.

அதாவது திருமணத்தின் போது மணமகன் குதிரையில் வருவது வழக்கம், ஆனால் இவர் தலித் பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் கிராமத்தில் உள்ள உயர் சாதிப்பிரிவினர் இவரை குதிரையிலெல்லாம் பவனி வரக் கூடாது என்று எச்சரித்துள்ளனர்.

இதனையடுத்து இந்த தலித் நபர் போலீஸில் புகார் அளித்து தன் திருமணத்திற்கு பாதுகாப்புக் கேட்டுள்ளார். ஆனால் போலீஸ் தரப்பில் இவரது கோரிக்கையினால் விழிப்புடன் கவனித்து வருகிறோம், ஆனால் கிராமத்தில் யாரும் இவரது குதிரை விஷயத்தில் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை என்கின்றனர்.

அலக் ராம் என்ற இந்த தலித் நபர் திருமணத்தன்று குதிரை சவாரி ஊர்வலம் நடத்தினால் தன்னை கொன்று விடுவதாக கிராமத்தின் உயர்சாதியினர் மிரட்டுவதாகக் கூறுகிறார்.

அலக் ராம் ஊடகத்தாரிடம் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் பல ஆண்டுகளாக குதிரை சவாரியுடன் தான் பழம்மரபுகள் படி திருமண ஊர்வலம் நடத்துகிறோம். எனக்கும் குதிரையில் வலம் வரும் ஆசை உள்ளது. ஆனால் சில உயர்சாதிப்பிரிவினர் என்னைக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார்கள்” என்றார்.

அலக் ராமின் தந்தை கயாதின் கூறுகையில், ‘என் மகனுக்கு ஜூன் 18ம் தேதி திருமணம், அதில் தான் குதிரையில் ஏறி ஊர்வலமாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறான். ஆனால் இப்போது போலீஸில் புகார் அளித்து பாதுகாப்பு பெறலாம் ஆனால் பின்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகின்றனர்’ என்றார்.

மகோப்கஞ்ச் போலீஸ் நிலையத்தின் துணை ஆய்வாளர் பிரபாகர் உபாத்யாய் கூறுகையில், “இவர்கள் கூறுவது போல் பிரச்னைகள் செய்யப் போவதாக நான் ஒரு நபரைக் கூட இதுவரை காணவில்லை. ஆனாலும் கவனமாக இருக்கிறோம்” என்றார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் கிராமத்துக்குச் சென்று அலக் ராமுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Contact Us