கோவாக்சின், ஸ்புட்னிக்-வி போட்டுக் கொண்ட மாணவர்களுக்கு மீண்டும் வேறு தடுப்பூசி; என்னடா செய்யிறீங்க!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி ஆகிய வாக்சின்கள் உலகச் சுகாதார அமைப்பினால் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை என்று இதற்குக் காரணம் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி நியுயார்க்டைம்ஸ் இதழில் வெளியான செய்தியில், இந்தியாவைச் சேர்ந்த மில்லியனி தோஷி என்ற 25 வயது மாணவர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மாஸ்டர்ஸ் டிகிரி கோர்சில் சேர்ந்திருக்கிறார். இவர் 2 டோஸ்கள் கோவாக்சின் எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால் மீண்டும் இவருக்கு வேறு வாக்சின் போடப்பட வேண்டும் என்று கொலம்பியா பல்கலைக் கழகம் வலியுறுத்தியுள்ளது.

“இருவேறு தடுப்பூசிகளை எடுத்துக் கொள்வது எனக்கு கவலையளிக்கிறது” என்று தோஷி தன் மெசேஜ் செயலி மூலம் கவலை தெரிவித்துள்ளார்.

பல்கலைக் கழகங்கள் மட்டுமல்லாது கல்லூரிகளும் தங்கள் மாணவர்கள் உலகச் சுகாதார அமைப்பு அப்ரூவ் செய்யாத தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டிருந்தால் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள்.

ஆனால் அமெரிக்காவின் நோய் தடுப்பு மையத்தின் செய்தித் தொடர்பாளர், கர்ஸ்டன் நார்ட்லண்ட் என்பவர் கூறும்போது, “கோவிட்-19 தடுப்பூசிகள் ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய வகையல்ல. இருவேறு வாக்சின்களை எடுத்துக் கொண்டால் அது எத்தனை திறனுடன் வேலை செய்யும் என்பது பற்றி இன்னமும் ஆய்வு செய்யவில்லை” என்கிறார்.

இதனையடுத்து அவர் பரிந்துரைப்பது என்னவெனில் அமெரிக்காவுக்கு வெளியே உலகச் சுகாதார அமைப்பு இன்னும்ம் அனுமதி வழங்காத தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்கள் 28 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அமெரிக்க எஃப்.டி.ஏ. பரிந்துரைக்கும் வேறு வாக்சின் எடுத்துக் கொள்ளலாம் என்கிறது அமெரிக்க மருந்துக் கட்டுப்பாட்டு மையம்.

அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் வாக்சின்களுக்கு உலகச் சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்காவில் பல்கலைக் கழகங்கள் உலகச் சுகாதார அமைப்பு அனுமதித்த வாக்சின்களையே எடுத்துக் கொள்ள வலியுறுத்துகின்றன. இதனால் இந்தியாவிலிருந்து சென்ற மாணவர்களுக்கு சிக்கல்கள் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 லட்சம் மாணவர்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு மேல் படிப்புப் படிக்கச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நியூயார்க் டைம்ஸ் நாளேட்டுச் செய்தியில் கூறப்பட்டுள்ளது

Contact Us