வவுனியாவில் இரகசிய திருமணம் நடத்தியுள்ளார்கள்; பின்பு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியாவில் சுகாதார அறிவுறுத்தல்களை மீறி திருமண நிகழ்வு இடம்பெற்றதால் திருமண மண்டபம் சுகாதார தரப்பினரால் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் அமைந்துள்ள வன்னி இன் திருமண மண்டபத்தில் மன்னாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவருக்கும் திருமணம் இடம்பெற்றிருந்தது.

திருமணத்திற்கு சுகாதாரப்பிரிவினரின் அனுமதி கோரப்பட்டிருந்தது.

15 பேர் வரையில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது, எனினும் மண்டபத்தில் திருமணம் நடத்த அனுமதிக்கப்படவில்லை.

ஆனால் வன்னி இன் திருமண மண்டபத்தில் திரமணம் இடம்பெற்றிருந்தது.

குறித்த திருமண நிகழ்வில் சுமார் 50 பேர் வரையில் கலந்து கொண்டிருந்தனர்;.

இந்நிலையில் குறித்த திருமண நிகழ்விற்கு சென்ற சுகாதாரப் பிரிவினர் அங்கிருந்தவர்களை கடுமையாக எச்சரித்து வெளியனுப்பியதுடன், திருமண வீட்டாருக்கும் கடுமையான எச்சரிக்கை வழங்கப்பட்டது.

சுகாதார அறிவுறுத்தல்களை மீறி மண்டபத்தை வழங்கியமைக்காக மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

Contact Us