ஹாய் என ஆரம்பித்து ஆபாச பேச்சு.. இன்ஸ்டாகிராமில் இளம்பெண் பட்ட பாடு!

இன்றைய இளம்தலைமுறையினர் சோஷியல் மீடியாக்களில் அதிக நேரம் செலவிடுகின்றனர்.இங்கு ஸ்மார்ட்போன் இல்லாத வீடுகளே இல்லை. ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்டாகிராமில் அக்கெளவுண்ட் இல்லாத இளம்தலைமுறையினரை பார்ப்பது அரிது. ஷோஷியல் மீடியாக்களை சிலர் பொழுதுபோக்கிறாக பயன்படுத்த தொடங்கி பின்னர் அதிலே பொழுதை கழிக்கத்தொடங்கிவிடுகின்றனர்.

ஸ்மார்ட்போன்கள் அறிவையும் ஆபத்தையும் ஒருங்கே கொண்டுள்ளது. குவாலியரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சோஷியல் மீடியாவில் தனக்கு வந்த ஆபாச மிரட்டல் குறித்து சைபர் க்ரைமில் புகார் தெரிவித்துள்ளார்.

மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரை சேர்ந்த 21வயது கல்லூரி மாணவி கடந்த 4 வருடங்களாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் அவரது நட்பு வட்டாரத்தில் இல்லாத முன்பின் தெரியாத ஒரு நபரிடம் இருந்து ஏப்ரல் 2-ம் தேதி அவருக்கு ஒரு ப்ரெண்ட் ரெக்வெஸ்ட் வந்துள்ளது. அந்த நபரை தனக்கு தெரியாததால் அவர் அந்த ரெக்வெஸ்டை ஏற்கவில்லை அதனை கடந்து சென்றுவிட்டார். ஆனாலும் அந்த ஐடியில் இருந்து தொடர்ந்து ஹாய்.. ஹலோ போன்ற மெசேஜ்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. அதன்பின் நட்பாக இருக்கலாம் என்பது போன்ற ப்ரெண்ட்ஷிப் மேசேஜ்கள் வர ஆரம்பித்துள்ளன.

ஏப்ரல் 24-ம் தேதி இதேபோன்று அந்த ஐடியில் இருந்து மேலும் சில மெசேஜ்கள் வந்துள்ளது. அந்தப்பெண் பதிலளிக்கவில்லை என்றதும் ஆபாசமான மெசேஜ்கள் வந்துள்ளன. அதன்பின் இரண்டு நாள்களாக எந்த மெசேஜ் வரவில்லை. மீண்டும் அந்த ஐடியில் இருந்து மெசேஜ் வரத்தொடங்கியது. ஆனால் இந்தமுறை மிரட்டல் ரக மெசேஜ்கள் வந்துள்ளன. ‘கடைசியாக கேட்கிறேன். பதிலளிப்பாயா இல்லை உன்னுடைய நிர்வான படங்களை வைக்கட்டுமா’ மிரட்டல் வந்துள்ளது.

உடனடியாக இந்த மிரட்டல் குறித்து தனது குடும்பத்தினருக்கு அவர் தெரியப்படுத்தியுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினருடன் சென்று சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார். அந்த ஐடியை ட்ரேஸ் செய்து வருகின்றனர்.

Contact Us