ஏமாற்றிய காதலன் வீட்டின் முன் பேண்ட் வாத்தியக் குழுவுடன் காதலி செய்த செயல்; இளைஞர்களே கவனம்!

மத்திய பிரதேசத்தில் உள்ள கொரக்பூரைச் சேர்ந்த, சந்தீப் மவுர்யா என்பவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது அத்தைப் பெண், ஊருக்கு வந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பின்னர் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்து சிறுமியுடன், மார்யா பாலியல் உறவு வைத்து கொண்டதாகக் கூறப்படுகிறது

பின்னர் ராணுவத்தில் வேலை கிடைத்தவுடன், அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க சந்தீப் மவுர்யாவின் வீட்டினர் மறுத்துள்ளனர். மேலும் வேறு ஒருவரை அவருக்கு திருமணம் செய்துவைக்கவும் குடும்பத்தினர் முயற்சி செய்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை அழைத்துக்கொண்டு, பேண்ட் வாத்தியக் குழுவுடன் உறவினர் வீட்டிற்கு சென்று, மகளை திருமணம் செய்து கொள்ளக் கோரி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஊரே திரண்டது. அப்போது, மவுர்யா தன்னை திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தற்கொலை செய்து கொள்ள போவதாக சிறுமி மிரட்டல் விடுத்தார். இதனால் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தால், சிறுமியின் வீட்டார் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த வடக்கு கோரக்பூர் போலீஸ் சூப்பிரண்டு மனோஜ் குமார், சந்தீப் மவுர்யா ராணுவ வீரர் என்பதால், ராணுவ நீதிமன்றத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Contact Us