மகன் உயிரிழந்த சோகத்தில் தந்தைக்கு நடந்தது; என்னவொரு பாசம்.. நெகிழ்ச்சி சம்பவம்!

சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி அடுத்த இசாக்கத்தாகேலி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் ரெட்டி . (வயது 60). விவசாயி.

இவரது மனைவி குருவம்மாள். இவர்களுக்கு 4 மகன், 3 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர் .

இந்த நிலையில் முனிரத்தினம் ரெட்டியின் 2வது மகன் கிருஷ்ணமூர்த்தி (30). என்பவருக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

அவரை திருப்பதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணமூர்த்தி இறந்தார்.

மகனின் உடலை பார்த்து முனிரத்தினம் ரெட்டி கண்ணீர் விட்டு கதறி அழுதார். அப்போது துக்கத்தை தாங்க முடியாமல் இருந்த அவர் திடீரென கீழே சுருண்டு விழுந்தார்.

அவரை எழுப்ப முயன்றனர். அப்போது மகன் இறந்த சோகத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.

மகன் உயிரிழந்த துக்கம் தாங்காமல் தந்தை உயிரிழந்ததால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

மகன், தந்தை உடல்களை மயானத்தில் ஒரே குழியில் உறவினர்கள் அடக்கம் செய்தனர்.

Contact Us