உலகில் எந்த ஒரு நாடும் பாதுகாப்பான நாடு அல்ல- வரை படத்தை பார்த்தால் பதறுகிறது !

உலக வரை படத்தைப் பார்த்தால், தற்போது கொரோனா இல்லாத நாடே கிடையாது என்று வந்துவிட்டது. அதில் மிக மிக மோசமான நிலையில் உள்ள நாடு இந்தியா தான். அங்கே சுமார் 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா தொற்று இருக்கிறது. அது போக பிரேசில் 4, லட்சம் பேர், ஆஜன்டீனா 2 லட்சம் பேர், கொலம்பியா 1 லட்சத்தி 75,000 பேர், என்று எண்ணிக்கை எகிறிக் கொண்டு இருக்கிறது. உலக வரை படத்தில் பல நாடுகளில் ஆயிரக் கணக்கில் மக்கள் கொரோனாவல் பாதிக்கப்பட்டு இருப்பது தெளிவாக தெரிகிறது. இதனால் விடுமுறை செல்வது என்பது எந்த ஒரு வகையிலும் பாதுகாப்பே இல்லை என்றாகிவிட்டது.

இன் நிலையில் சில நாடுகளை மட்டும் பிரித்தானியா தனது சிவப்பு பட்டியலில் இட்டுள்ளதே தவிர. பச்சை பட்டியலில் உள்ள நாடுகளில் கூட கடும் தொற்று காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

Contact Us