கொரோனா சாவில் இருந்து மீண்டு வந்த 70 வயது பாட்டி: இறந்த பின் எப்படி வந்தார் ?

கிருயா அம்மா என்னும் 70 வயது பாட்டி, கடந்த மே மாதம் 15 திகதி இறந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்து இறப்பு சன்றிதழையும் கொடுத்து விட்டார்கள். உடலை எடுத்துச் சென்று கணவர் எரியூட்டி ஈமைக் கிரிகைகளை முடித்தும் விட்டார். ஆனால் 2 வாரம் கழித்து பொடி நடையாக வீடு வந்து சேர்ந்த கிருயா அம்மாவைப் பார்த்த அனைவரும் ஆவி என்று மிரண்டு போய் ஓட ஆரம்பித்தார்கள்.. என்ன நடந்தது என்று தெரியுமா ? அதிர்வு இணையத்தின் புலனாய்வு செய்தியை வாசிப்போம் வாருங்கள்…

மே மாதம் 1ம் திகதி கிருயா அம்மாவுக்கு கொரோனா தொற்றியது. இதனால் அவர் நிலமை மோசமாகவே அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மே 15ம் திகதி அவர் நிலை மிகவும் மோசமாக உள்ளது என்று வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தார்கள். அவரை பார்கச் சென்ற உறவினர்கள் திகைத்துப் போனார்கள். காரணம் கட்டிலில் அம்மா இல்லை. இதனால் அம்மா எங்கே என்று கேட்க்கவே, முதலில் வேறு இடத்திற்கு மாற்றி விட்டோம் என்று கூறிய தாதிமார். பின்னர் அவர் இறந்து விட்டார். உடல்கள் இருக்கும் இடத்திற்கு சென்று உடலை அடையாளம் கண்டு எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார்கள்.

இதனை அடுத்து கணவர் மற்றும் உறவினர்கள் சென்று பல உடல்களை பார்த்து. இறுதியாக கிருயா அம்மா உருவத்தை ஒத்த ஒரு உடலை எடுத்துச் சென்று தகனம் செய்து விட்டார்கள். சொந்த கணவரால் கூட சரியாக அடையாளம் காண முடியவில்லை. காரணம் அந்த அளவு உடல்கள் அதிகமாகவும். மாறு பட்ட நிலையிலும் இருந்துள்ளது. ஆனால் அம்மா 15ம் திகதி வைத்தியசாலையில் இருக்கப் பிடிக்காமல், வெளியேறிவிட்டார். அவர் வீட்டுக்கு திரும்ப முன்னர், அவருக்கு கொரோனா மாறியும் விட்டது. இதனால் முற்றாக குணமடைந்த அம்மா பொடி நடையாக வீடு வந்து சேர்ந்து விட்டார்.

இது தான் இன்றைய இந்தியா….

Contact Us