விமானத்தில் விமானியின் அறைக் கதவை உடைத்து உள்ளே செல்ல முற்பட்ட நபர் இவர் தான் !

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குரிய 386 என்ற விமானம் நாஷ்வில் புறப்பட்டு சென்றது. அப்போது விமானம் நடுவானத்தில் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பயணி, திடீரென்று விமானியின் அறைக்குள் அதிரடியாக புகுந்துள்ளார்.

உடனடியாக விமான பணியாளர் அவரை தடுத்து நிறுத்தி, கயிற்றால் கைகால்களை கட்டி வைத்தார். அந்த பயணி விமானியின் அறைக்குள் புகுந்து அந்த விமானத்தை கடத்த திட்டமிட்டு இருப்பார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விமானம் ஆல்புஃஉஎர்ஃஉஎ விமான நிலையத்திற்கு திருப்பி, பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

Contact Us