தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி லண்டன் வந்து தண்ணி அடிப்பது போல காட்டிய Family Man 2 !

முன் நாள் Q-பிராஞ் அதிகாரி ஒருவரின் துணையோடும், இந்திய RAW அமைப்பின் உதவியோடும் த.. பேமிலி மேன்(THe Family Man-2) என்ற சீரியலை அமேசன் பிரைம்முக்காக இயக்கியுள்ளார் ராஜ். முழுக்க முழுக்க விடுதலைப் புலிகளை பற்றி எடுக்கப்பட்ட இந்த சீரியலில். இந்தியாவில் அதுவும் சென்னையில் நடக்கவுள்ள மாநாடு ஒன்றில் வைத்து ராஜபக்ஷவை விமானக் குண்டு மூலம் போட்டுத் தள்ள புலிகள், முனைவது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுவும் 2009க்கு பிறகு தலைவர் பிரபாகரன் அவர்கள் சென்னை சென்று. அங்கிருந்து லண்டன் வந்து வாழ்வது போலவும். பெரும் ஆடம்பரமான வீடு ஒன்றில் தங்கி இருந்து,  கணவாய் கறி சமைப்பது போலவும். விஸ்கி அடிப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது..

இதில் இருந்து இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால், அது எமக்கான விடையம் அல்ல. எங்கள் பிள்ளைகள், அவர்கள் பிள்ளைகள் என்று தமிழர்களின் அடுத்த சந்ததிக்கு , தலைவர் பிரபாகரன் விஸ்கி அடிக்கும் நபராக காட்ட முனைகிறார்கள். இதனால் போராட்டம் என்றால் என்ன என்று தெரியாமல், 2009ம் ஆண்டுக்கு பின்னர் பிறந்த தமிழ் பிள்ளைகள், இன்னும் 2 வருடம் கழித்து இந்த படத்தை பார்த்தால். தலைவர் பற்றி எப்படியான ஒரு நிலைப்பாட்டை எடுப்பார்கள் என்பதனை ஊகிக்க முடிகிறது. அதாவது தமிழர்களின் வரலாற்றை, வீரத்தை, போராட்டத்தை அப்படியே மாற்றி, கேவலமாக காட்ட  …திட்டமிட்டு இது போன்ற படங்கள் எடுக்கப்படுகிறது.

இதில் நாடு கடந்த அரசையும் கோர்த்து விட RAW மற்றும் Q-பிராஞ் தவறவில்லை. இறுதியில் நாடு கடந்த அரசின் பிரதமர் தலைவர் பிரபாகரனை காட்டிக் கொடுப்பது போல கதையை முடிக்கிறார்கள். நடக்காத ஒரு விடையத்தை, உண்மையில் நடந்தது போல படமாக்கி உள்ளார்கள். தமிழ் நாட்டில் உள்ள Q பிரிவு பல ஆண்டுகளுக்கு முன்னர் பல போராளிகளை கைது செய்து இருக்கிறார்கள். அதன் போது பல துப்பாக்கி சூடு சம்பவங்கள் இடம்பெற்றிருக்கும். அதனை அடிப்படையாக வைத்து திரிவு படுத்தி மிகவும் கேவலமாக இந்த படத்தை எடுத்து. ஈழத் தமிழர்களின் வரலாற்றையே கறை படிந்ததாக மாற்ற முயற்ச்சி செய்து வருகிறார்கள்.

தமிழ் நாட்டில் 2 வீட்டை வைத்திருக்கும் சிரஞ்சீவி மாஸ்டர் என்ன செய்கிறார் ? அவர் ஏன் இதுவரை எந்த கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை ?. அதனை விட தமிழ் நாட்டில் உள்ள எல்லா தொலைக் காட்சிகளிலும் வாய் கிழியப் பேசும் சன் வாத்தி சென்னையில் எதனை பிடுங்கிக் கொண்டு இருக்கிறார் என்பது எல்லாம் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் யார், ஒழுங்கின் கீழ் வேலை செய்கிறார்கள் என்பது இப்போது மக்களுக்கு நன்றாக புரியும். இந்த படம் வெளியாகி, ஓடிக்கொண்டு இருக்கிறது. பல மொழிகளில் அமேசனில் ஓடுகிறது. தமிழ் உணர்வாளர்கள் கண்டு கொள்ளவே இல்லை. புலிகள் இயக்கம் மிகவும் நேர்த்தியான, கட்டுப்பாடான ஒரு இயக்கம் என்று சிங்களவரே கூறுவார்கள். ஆனால் இந்த இந்திய அடி வருடிகள் அடிப்படையை அழித்து வருகிறார்கள்.

2009ம் ஆண்டுக்குப் பின்னர் வெளிநாட்டு தமிழர்கள் அனுப்பும் பணத்தோடு, தலைவரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்திய மண்ணில் இப்படி ஒரு தாக்குதலை புலிகள் அமைப்பு ஒழுங்கு செய்வதாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது, ஈழத் தமிழர்களை அவமானப்படுத்தும் ஒரு விடையம். இதனை பிரித்தானியா ஆப்ஃகம் நிறுவனத்திற்கு நாம் அறிவித்து, இதனை ஒளிபரப்பும் நிறுவனத்திற்கு முதலில், இதற்கான தடை உத்தரவை பெறவேண்டிய கடைப்பாட்டில் உள்ளோம். இணைவோமா தமிழர்களே ?

அதிர்வுக்காக
கண்ணன்

Contact Us