விஜயகாந்த்திடதான் ‘ஜடேஜா’வோட ஃபேவரைட்..” ‘சுவாரஸ்ய’ தகவல் பகிர்ந்த ‘அஸ்வின்’!.. “அட, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!!”

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ள இந்திய அணி, சில தினங்களுக்கு முன் இங்கிலாந்து கிளம்பிச் சென்றிருந்தது.

ashwin shares about jadeja favourite song in tamil

இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி மோதவுள்ளது. இந்த இரு தொடர்களுக்காகவும், சுமார் 3 மாதங்களுக்கு மேல் வரை, இங்கிலாந்தில் இந்திய அணி முகாமிடவுள்ளது.

இந்த இரு தொடர்களுக்கான இந்திய அணியில், சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) மற்றும் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சமீப காலமாக, இருவரும் இந்திய அணியின் வெற்றிகளுக்கு தூண் போல இருந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலும், இருவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜடேஜாவிற்கு மிகவும் பிடித்த தமிழ் பாடல் என்ன என்பது பற்றி, அஸ்வின் தனது யூ டியூப் சேனலில் தெரிவித்துள்ளார். கொரோனா காலம் தொடங்கியது முதலே, யூ டியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த அஸ்வின், அதில் தனது கிரிக்கெட் வாழ்வில் நிகழ்ந்த பல சுவாரஸ்ய தகவல்களையும், மற்ற வீரர்கள் அல்லது கிரிக்கெட் நிபுணர்களுடனும் நேர்காணல் நடத்தி வருகிறார்.

மிகவும் சிறப்பான கண்டென்ட்டுகளை நகைச்சுவையைக் கலந்து கொடுப்பதால், அஸ்வினின் வீடியோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அந்த வகையில், தனது வீடியோவில், ஜடேஜா குறித்த ஒரு அசத்தல் தகவலை அஸ்வின் பகிர்ந்துள்ளார். ‘நான் எப்போதும் ஜிம்மிற்கு போகும் போது தமிழ் பாடல்களை அதிகம் கேட்பேன். சமீபத்தில், ஜடேஜாவை ஜிம்மில் நான் சந்தித்த போது, எனது பிளே லிஸ்ட்டை பார்த்த அவர், அதில் ஒரு தமிழ் பாடலை தான் அதிகம் விரும்புவதாக என்னிடம் கூறினார்.

விஜயகாந்த் நடிப்பில் ‘வானத்தைப் போல’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ பாடல் தான் அது. அதன் பிறகு, அந்த திரைப்படம் பற்றியான தகவலை ஜடேஜா, என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்’ என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி வரும் ரவீந்திர ஜடேஜா, கடந்த ஆண்டு ரசிகர் ஒருவர், “உங்களுக்கு பிடித்த தென்னிந்தியா திரைப்படம் எது?” என இன்ஸ்டாவில் கேட்ட கேள்விக்கு, ‘விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ தான் என் ஃபேவரைட்’ என ஜடேஜா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Contact Us