குளியலறையை எட்டிப்பார்த்த உருவம்.. ஷாக்கான பெண் மருத்துவர் – குடும்பத்தினரிடம் சிக்கிய இளைஞர்!

புதுச்சேரி திருபுவனை சின்னப்பேட் பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். பணி முடிந்து நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பியுள்ளார். கொரோனா தொற்று காலம் என்பதால் குளித்துவிட்டு உறங்கலாம் என குளியலறைக்கு சென்றுள்ளனர். குளியறைக்கு வெளியில் ஒரு நிழல் போன்ற உருவம் இருப்பதைக்கண்டு திடுக்கிட்டார். வெளியில் இருந்து யாரோ மர்மநபர் குளியலறையை எட்டிப்பார்ப்பதை உறுதிசெய்தார்.

இதனையடுத்து அங்கிருந்து வெளியேறியவர் வீட்டில் இருந்த தனது தந்தை மற்றும் சகோதரனிடம் குளியலறையில் குளித்து கொண்டிருந்தபோது வெளியில் இருந்து யாரோ எட்டிப்பார்த்தாக கூறியுள்ளார். அவர்கள் வெளியில் சென்று குளியலறையை எட்டி பார்த்த வாலிபரை பிடித்துள்ளனர். அந்த நபர் அதேபகுதியை சேர்ந்த அருண்குமார் என்பது தெரியவந்தது.

பிடிப்பட்ட நபரை திருபுனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருத்துவர் தரப்பில் அந்த நபர் மீது காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருபுவனை போலீசார் பெண்ணை மானபங்கம் படுத்தல் செய்ததாக அருண்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Contact Us