கொரோனாவை முற்றிலும் ஒழிக்க வேண்டும்..! பிரித்தானியா பிரதமர் பலே திட்டம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் 2022-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசிகள் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜி-7 தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் கார்ன்வால்-ல் ஜூன் 11-ம் தேதி தொடங்கி ஜூன் 13-ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த ஜி-7 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் உலகில் உள்ள ஒவ்வொருவரும் 2022-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி போட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாநாட்டில் பங்கேற்க உள்ள சக தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்த கொரோனா பெருந்தொற்றிலிருந்து எவ்வாறு மீண்டெழ போகிறோம் என்று உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் 2022-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒவ்வொருவரும் தடுப்பூசி போட வேண்டும், அது மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக அமையும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக பிரதமர் போரிஸ் ஜான்சன் சக ஜி-7 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளதாகவும், கொரோனா தொற்றால் ஏற்பட்ட பேரிழப்பு மீண்டும் நடக்க ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Contact Us