கனடா தமிழ் காமுகர்களிடம் தர்மிகா என்ற பெயரில் கதைத்து காசு கறந்த சிங்கள இளைஞன் இவர் தான் !

சிங்கள சமூகவலைத்தளங்களில் கனடாத் தமிழர்கள் சிலரின் திருவிளையாடல் செயற்பாடுகள் தொடர்பாக பதிவுகள் வெளியாகியுள்ளன.கனடாவில் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களான ஒரு சில தமிழர்கள் லட்சக்கணக்கான பணத்தை சிங்கள இளைஞன் ஒருவரிடம் கொடுத்து ஏமாந்துள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. குறித்த சிங்கள இளைஞன் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் நீண்ட நாட்கள் தங்கியிருந்துள்ளதாகவும் அத்துடன் கலைஞனாக இருப்பதாகவும் அதனால் நன்றாகத் தமிழில் கதைக்க மற்றும் வாசிக்க, எழுதத் தெரிந்து வைத்திருந்துள்ளார்.

இந் நிலையில் பெண்கள் போல் வேடம் இட்டு தனக்கு என தர்மிகா என்ற புனைபெயரில் சொந்த இடம் திருகோணமலை என்றும் பியூட்டி பார்லர் நடத்துவதாகவும் பேஸ்புக்கில் பதிவு செய்து போலிப் பேஸ்புக் ஒன்றை வைத்திருந்துள்ளார். இந்த பேஸ்புக்கில் கனடாவைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் வேறு நாடுகளில் உள்ள தமிழர்களும் நட்பாகியுள்ளார்கள். அடிக்கடி தனது பெண் வேடமிட்ட புகைப்படங்கள் மற்றும் பெண் வேடத்தில் அரைகுறை ஆடைகளுடனும் பேஸ்புக்கில் பதிவிட்டு, கனடா தமிழ் வயோதிப காமுகர்களை உசுப்பேத்தியும் வந்துள்ளார்,

இவரது புகைப்படப் பதிவுகளைப் பார்த்து ஜொல்லுவிட்ட கனடாவைச் சேர்ந்த சில தமிழ் வயோதிபர்கள் பெண் என்ற நினைப்பில் குறித்த சிங்கள இளைஞனுடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்கள். அவர்களுக்கு யாரோ ஒரு பெண்ணின் நிர்வாண வீடியோக்களை தலை தெரியாதவாறு எடுத்து அனுப்பியதுடன் அவர்களிடம் தன்னுடைய அவ்வாறான வீடியோக்களை பார்வையிடுவதற்கும் தனது பியூட்டி பார்லரை நவீனப்படுத்துவதற்கும் சில ஆயிரம் டொலர்கள் தேவை என கூறி கிட்டத்தட்ட 10 லட்சம் ரூபாய்களுக்கு மேல் பெற்றுள்ளதாகத் தெரியவருகின்றது.

குறித்த இளைஞனுடன் சேர்ந்திருந்த பெண் ஒருவருக்கும் இளைஞனுக்கும் ஏற்பட்ட மோதலின் பின்னரே பெண் மூலமாக இந்த வயோதிபர்களுக்கு உண்மை நிலை தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அட ஊரில் முன் நாள் போராளிகள் , சிறுவர்கள் , கணவனை இழந்தவர்கள் கஷ்டப்படுகிறார்கள் பணம் அனுப்புங்கள் என்று கேட்டால் எவரும் அனுப்ப தயார் இல்லை. ஆனால் இது போன்ற விடையங்களுக்கு மட்டும் நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு சென்றுவிடுகிறார்கள் சில தமிழர்கள். என்ன செய்வது ?

Contact Us