சோஃபா’ ரொம்ப பிடிச்சிருக்கு பிரதர்…! ‘நானே வாங்கிக்குறேன்…’ ‘காசு கிரெடிட் ஆகும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தவருக்கு…’ – ‘வெடிகுண்டு’ போல் விழுந்த அந்த மெசேஜ்…!

சோபா வாங்குவதாக கூறி திட்டம் போட்டு பணத்தை மோசடி செய்த சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.

Bangalore money was swindled out of a plan to buy a sofa.

என்னதான் பல விழிப்புணர்வு செய்திகள் மற்றும் விளம்பரங்கள் வந்தாலும் ஆன்லைன் மற்றும் வங்கி மோசடிகள் தொடர்ந்து நடந்துக் கொண்டே தான் இருக்கிறது. நூதனமாக ஏமாற்றுவதற்கு பல மோசடி பேர்வழிகள் அனைத்து தளங்களிலும் ஊடுருவி உள்ளனர்.

பெங்களூர் தெற்கு மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அக்‌ஷய் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவர், ஆன்லைனில் பழைய பொருட்களை வாங்கி, விற்கும் இணையதளத்தில், தன் வீட்டில் இருக்கும் பழைய சோபா ஒன்றை விற்க இருப்பதாக புகைப்படத்தை அப்டேட் செய்துள்ளார்.

அதைப் பார்த்த இளைஞர் ஒருவர், பெங்களூரு இளைஞரை தொடர்புக் கொண்டு, தனக்கு சோபா பிடித்திருப்பதாகவும், அதனை நானே வாங்கி கொள்கிறேன் எனக் கூறியுள்ளார். அதோடு பணத்தையும் ஆன்லைன் மூலமாகவே அனுப்புவதாகவும் கூறியுள்ளார்.

இவரும் அவர் சொன்னப்படி எல்லா விவரங்களை அனுப்பிவிட்டு காசு கிரெடிட் ஆகும் என காத்திருந்துள்ளார். அப்போது அவர் செல்பேசியில் ஒரு மெசேஜ் வந்தது. அதைத் திறந்து பார்த்தபோது தன் வங்கி கணக்கில் இருந்த ரூ.1.15 லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

தான் ஏமாந்ததை உணர்ந்த பெங்களூரு இளைஞர், மோசடி குறித்து தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகின்றனர்.

Contact Us