இவர் எந்த நாட்டின் குடிமகள்..? இளவரசருக்கு பிறந்துள்ள குழந்தை… மக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி..!!

கடந்த 4-ஆம் தேதி பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு லிலிபெட் லில்லி டயானா மவுண்ட்பேட்டன் விண்ட்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாவதாக பிறந்த அந்தப் பெண் குழந்தை அமெரிக்க குடிமகளா அல்லது பிரித்தானிய குடிமகளா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேசமயம் மேகன் அமெரிக்க குடிமகளாக இருப்பதால் இரண்டாவதாக பிறந்த அந்த பெண் குழந்தைக்கும் அமெரிக்க குடியுரிமை இயல்பாகவே கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானிய இளவரசரான ஹரி பிரித்தானிய குடிமகனாக இருப்பதால் பிரித்தானிய குடியுரிமையும் அந்த பெண் குழந்தைக்கு இயல்பாகவே கிடைத்துவிடும். எனவே ஹரி, மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்துள்ள அந்த பெண் குழந்தை பிரித்தானிய குடியுரிமையும், அமெரிக்க குடியுரிமையும் கொண்டவராக இருப்பார் என்று கூறப்படுகிறது.

Contact Us