தமிழ்நாடு என பதிவிட்ட ஏ.ஆர். ரஹ்மான் – காரணம் என்ன? வெடித்த பூகம்பம் ?

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவரது இருப்பிடம் “இந்தியா” என்பதை ‘தமிழ்நாடு` என மாற்றப்பட்டிருப்பது, அவரது ரசிகர்களிடையே விவாதத்தை தூண்டியிருக்கிறது என அதிர்வு இணையம் அறிகிறது. மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அழைப்போம் என்ற சில கட்சியினர் சமீப காலமாக முன்னெடுத்து வரும் விவாதத்தின் நீட்சியாக ‘தமிழகமா தமிழ்நாடா?’ என்ற விவாதம், கடந்த சில நாட்களாக அரசியல் விமர்சகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகன் அமீனுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதில் ‘நாங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டோம். நீங்கள்?’ என்றும் அவர் கேட்டிருக்கிறார். அப்போதுதான் அவர் தனது இருப்பிடத்தை தமிழ்நாடு என்று மாற்றியதை பலரும் கவனித்துள்ளனர். பல ரசிகர்கள் பலரும் ‘நாங்களும் எடுத்து கொண்டோம்’ என ரஹ்மானுக்கு பதிலளித்துள்ளனர். இதற்கு முன்பு ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்திருந்த புகைப்படங்களில் தனது இருப்பிடத்தை ‘சென்னை, இந்தியா’ என்றே குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், ‘தமிழ்நாடு’ என அவர் குறிப்பிடுவது இதுவே முதல்முறை என்பதால் அவரது ரசிகர்களிடையே இது பேசுபொருளாகியிருக்கிறது.

Contact Us