கப்பல் தீப்பற்றியதால் கொழும்பு கடற்கரைக்கு வந்து அலப்பறை போட்ட கடற்கன்னியை பாருங்களேன்!

கொழும்பு துறைமுக கடலில் எம்.வி எக்ஸ்-பிரஸ் பேர்ல் என்ற கொள்கலன் கப்பல், 1,486 கொள்கலன்களில் நைட்ரிக் அமிலம் மற்றும் பிற அபாயகரமான ஐஎம்டிஜி குறியீடு இரசாயனங்கள் எடுத்துச் சென்ற நிலையில் தீ பற்றியதில், கொள்கலன்கள் உட்பட பெரும்பாலான பகுதிகள் எரிந்து நாசமாகியுள்ளது.

தொடர்ந்து ஏற்பட்ட பெரும் தீயை அணைக்க இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட கூட்டு முயற்சிகளால் இறுதி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மீன்கள், கடல் ஆமைகள் மற்றும் பல கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரையொதுங்கியுள்ளன, மேலும் இந்த தீ விபத்தில் கடல் வளம் மாசடைந்துள்ளதுடன், கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதென, சுட்டிக்காட்டுறார்கள் சூழலியலாளர்கள்.

இந்நிலையில் நீர்கொழும்பு கடற்பரப்பில் கடற்கன்னி ஒன்று கரையொதுங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் காணொளியொன்று பரவி வருகிறது.

பார்க்க அகோர முகமுடைய பெண் போல் காட்சியளிக்கிறது அந்த விசித்திரமான உருவம், ஆனால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மையென்பது தெரியவில்லை, பெரும்பாலும் இந்த காணொளியில் உண்மையில்லை என்பதே பலரின் கருத்தாகவுள்ளது.

Contact Us