பார்க்க தான் குழந்தை போல இருப்பாரு’… ‘வயசு மட்டும் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவோம்’… SOCIAL MEDIAவை கலக்கும் இந்த ‘ஹஸ்புல்லா’ யார்?

பார்ப்பதற்குக் குழந்தையாக இருக்கிறார், ஆனால் முகம் அப்படி இல்லையே என்று கூட தோன்றும்.

All You Need to Know about the Little Kid Hezbollah Magomedov

சமூகவலைத்தளங்களைத் தொடர்ச்சியாக உபயோகிப்பவர்களுக்கு நிச்சயம் இவரது முகம் பரிச்சயமானதாகவே இருக்கும். குழந்தைபோல் காட்சியளிக்கும் ஹஸ்புல்லா மாகோமெடோவ் (Hasbulla Magomedov) சமூகவலைத்தளங்களில் ஒரு கலக்கு கலங்கி வருகிறார் என்றே சொல்லலாம். இதனால் எல்லா தளங்களிலும் இவரின் வீடியோக்களை பார்க்க முடியும்.

All You Need to Know about the Little Kid Hezbollah Magomedov

இதற்கிடையே முதல்முறையாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு சந்தேகம் வரும். அது பார்ப்பதற்குக் குழந்தையாக இருக்கிறார், ஆனால் முகம் அப்படி இல்லையே, வயதான தோற்றத்துடன் இருக்கிறது என நீங்கள் நினைக்கலாம். உருவத்தைப் பார்த்தால் 5 வயதுக் குழந்தை இருக்கும் உயரத்தில் இருப்பார். ஆனால் அவரது வயது தான் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு தற்போது 18 வயதாகிறது.

ரஷ்யாவின் மகச்சலா (Makhachkala) பகுதியில் வசித்து வருகிறார். ஜீன் குறைபாடு காரணமாக அவரது உருவம் பார்ப்பதற்குக் குழந்தைபோல் இருக்கிறது. ஹஸ்புல்லாவின் உயரம் மற்றும் குரலும் குழந்தைபோலவே உள்ளது. அவர் Growth Hormone குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு நாளிதழ்கள் தெரிவிக்கின்றன. ஸ்போர்ட்ஸ்கீடாவில் வெளியாகியுள்ள தகவலின்படி, அவரது உயரம் ஒரு மீட்டர். 16 கிலோ எடையுடன் இருக்கிறார்.

All You Need to Know about the Little Kid Hezbollah Magomedov

டிக்டாக்கில் பல்வேறு காமெடி கன்டென்டுகளை போட்டுவந்த ஹஸ்புல்லாவின், குழந்தைகளுடன் சண்டையிடும் வீடியோக்கள் இணைய வாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. குழந்தைகளுடன் சண்டையிடுவதுபோல் நடிப்பது, இதற்கு முன்பு மேற்கொண்ட கன்டென்டுகளைவிட அவருக்கு நல்ல ரீச்சைக் கொடுத்தது. இதனால், உலகம் முழுவதும் சமூகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாக இருப்பவர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஹஸ்புல்லாவுக்கு, எம்.எம்.ஏ சோஷியல் மீடியா யுனிவெர்ஸ் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

All You Need to Know about the Little Kid Hezbollah Magomedov

இது ஒருபுறம் இருக்க ஹஸ்புல்லாவுக்கு ரஷ்யாவில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. சமூகவலைத்தள கன்டென்டுகளுக்காக அவர் குழந்தைகளுடன் விளையாடுவதை ரஷ்ய விளையாட்டு அமைப்பான Dwarf Athletic Association கடுமையாகச் சாடியுள்ளது. ஹஸ்புல்லா விளையாட்டை கேலிப்படுத்தும் செயலில் ஈடுபடுவதாகவும், அவரின் ஒழுக்கமற்ற செயல் மற்றும் தவறான அணுகுமுறைகள் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

Contact Us