நீங்க ரெஸ்ட் எடுங்க…’ ‘எல்லாத்தையும் நாங்க பாத்துக்குறோம்…’ ‘கொரோனா வார்டில் செவிலியர்கள் செய்த சேவை..!

ஒடிசாவில் கொரோனா வைரஸிற்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு செவிலியர் செய்துவரும் சேவை வீடியோவாக இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Odisha video nurse serving patients with corona virus

ஒடிசா மாநிலம், பிரம்மபூரில் உள்ள மகாராஜா கிருஷ்ண சந்திர கஜபதி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அப்போது வைரசால் பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு அங்கிருக்கும் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள், தேவையான உதவிகளை செய்வதோடு, அவர்களுக்கு முகச்சவரம் செய்வது மற்றும் பெண்களுக்கு தலை வாரிவிடுவது போன்ற வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது.

இந்த வீடியோ தற்போது வைரலாகி பல்வேறு தரப்பினரும் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களின் சீர்மிகு சேவையை பாராட்டி வருகின்றனர்.

Contact Us