பிரிட்டன் கோன் வால் பிச்சை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அமெரிக்க துருப்புகள்- UV ஹெலியில் தேடுதல்…

பிரித்தானியாவில் கோன் வால் கடல்கரை பகுதியை முற்று முழுதாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது அமெரிக்கா. அங்கே 400 க்கும் மேற்பட்ட அமெரிக்க சீக்ரெட் சர்விஸ் பாதுகாவலர்கள் கடமையில் ஈடுபட்டுள்ள அதேவேளை. சுமார் 50 கம்பர் வாகனங்களில் அதிகாரிகள் அமர்ந்து அந்த இடத்தை வான் மற்றும் தரை வழியாக நோட்டமிட ஆரம்பித்துள்ளார்கள். G7 உச்சி மாநாடு கோன் வால் கடல் கரையில் அண்டிய பகுதியில் வரும் வெள்ளி முதல் ஆரம்பமாக உள்ளது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். இதனை அடுத்து கோன் வால் கடல் கரை மற்றும் கடல் பகுதில் பாதுகாப்பு 10 மடங்கால் அதிகரிக்கப்பட்டுள்ளது. .. போதாக் குறைக்கு…

அமெரிக்க போர் கப்பல்கள் அங்கே நிற்கிறது. அது போக அல்ரா வயிலட் என்று சொல்லப்படும் புற ஊதாக் கதிர்களை பரப்பி இரவிலும் பகலிலும் துல்லியமாக பார்க்க கூடிய சாதனங்கள் அடங்கிய ஹெலி கடல்கரை எங்கும் சுற்றித் திரிகிறது. இது போதாது என்று பிரித்தானியா 5,000 பொலிசாரை அங்கே குவித்துள்ளது. மேலும் 1,000 துணைப் படைகளும் கோன் வால் கடல் கரைக்கு அனுப்பப்பட உள்ளார்களாம்.

சொல்லப் போனால் முழு கோன் வால் கடல் கரை மற்றும் கடல் பரப்பை, அமெரிக்க படைகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்கள். அவர்கள் போடும் உத்தரவை தான் பிரித்தானிய பொலிசார் கேட்க்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது.

Contact Us