தம்பி தமிழன் பிரசன்னாவின் மனைவி மறைவெய்திய செய்தியறிந்து.. சீமான் உருக்கமாக சொன்ன விடயம்!

தம்பி தமிழன் பிரசன்னாவின் மனைவி மறைவெய்திய செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக செய்தித்தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் இருப்பவர் தமிழன் பிரசன்னா. இவர் திமுகவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக விளங்குபவர். வழக்கறிஞரான தமிழன் பிரசன்னாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் தனது குடும்பத்தினருடன் சென்னை எருக்கங்சேரி இந்திரா நகர் மேற்கு பகுதியில் வசித்து வருகிறார். இவரது மனைவி நதியா செவ்வாய்கிழமையன்று காலை 10 மணியளவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக கொடுங்கையூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த கொடுங்கையூர் காவலர்கள் நதியாவின் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைந்தொடர்ந்து, பிரசன்னா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்காக தமிழன் பிரசன்னா கொடுங்கையூர் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில், தமிழன் பிரசன்னாவின் மனைவி மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திமுக செய்தித்தொடர்பு இணைச்செயலாளர் பாசத்திற்குரிய தம்பி தமிழன் பிரசன்னாவின் மனைவி நதியா மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன். தம்பியின் திருமணநிகழ்வில் பங்கெடுத்து, இருவரையும் வாழ்த்திய நினைவுகளை எண்ணும்போது பெரும்மனவலியை கூட்டுகிறது.

ஆற்ற முடியாதப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பி தமிழன் பிரசன்னாவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Contact Us