இறந்தவர்கள் கனவில் வரும் அதிசய நோய்.. அதிர்ச்சியில் உறைந்த கனடா மக்கள்.. குழப்பத்தில் விஞ்ஞானிகள்..!!

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ள கனடாவின் நியூ புருன்ஸ்விக் என்ற சிறிய மாகாணத்தில் மட்டும் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த நோய் குறித்த காரணம் தெரியாமல் குழப்பமடைந்துள்ளனர். தற்போது வரை சுமார் 48 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தூக்கம் வருவதில்லையாம். அவ்வாறு தூக்கம் வந்தாலும் உயிரிழந்தவர்கள் எல்லாம் கனவில் வருவதாக கூறுகின்றனர். இதனால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே கனடாவின் நரம்பியல் மருத்துவ நிபுணர்கள், இந்த நோயை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அதாவது சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பு இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்போது சுமார் 12 நபர்கள் இந்த நோயால் பாதிப்படைந்த போதும் 6 பேர் மட்டுமே பலியாகியுள்ளனர். எனவே இந்நோய் தொடர்பாக சுகாதாரத்துறையினர் ஆராய்ச்சியை தீவிரப்படுத்தினர். ஆனால் கடந்த ஒன்றரை வருடங்களாக, அவர்கள் கொரோனா தொற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.

எனினும் பல வருடமாக ஆய்வு மேற்கொண்டும், இந்நோய்க்கு பெயரும் வைக்கப்படவில்லை. மேலும் இயற்கை மூலமாக இந்நோய் பரவுகிறதா?  மரபு வழியாக பரவுகிறதா? மான் கறி போன்ற இறைச்சி உண்பதால் பரவியதா? என்ற எந்த கேள்விகளுக்கும் விஞ்ஞானிகளுக்கு பதில் தெரியவில்லை.

இந்த நோய் தொடர்பில், கடந்த மார்ச் மாதம் தான் முதன் முதலாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. நீல் கேஷ்மேன் என்ற நரம்பியல் நிபுணர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, நூற்றாண்டுகளுக்கு ஒரு தடவை தான் இந்த நோய் பாதிக்கும். மேலும் 18 வயதிலிருந்து 84 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த நோய் பாதிப்பதாகவும் கூறியுள்ளார்.

Contact Us