ராணியின் படத்தை அகற்ற வேண்டும்!.. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்களின் முடிவு..!!

மாக்டலென் கல்லூரி பொது அறையினுடைய மாணவர்கள் அமைப்பு, காலனித்துவத்தின் சின்னமாக, பிரிட்டன் ராணி இருப்பதால் அவரின் புகைப்படத்தை பல்கலைகழகத்தின் பொது அறையிலிருந்து நீக்கிவிட்டு, கலைப்படைப்பு ஒன்றை வைக்குமாறு கோரியுள்ளார்கள். மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முக்கிய தலைவர்களின் படத்தை வைக்க பரிந்துரைத்துள்ளார்கள்.

இது தொடர்பில் பிரிட்டனின் கல்வித்துறை செயலாளர் Gavin Williamson கூறுகையில், “ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ராணியின் படத்தை நீக்குவது மோசமானது. அவர் இங்கிலாந்தின் சிறப்பான அடையாளமாக இருக்கிறார். அவர் தன் ஆட்சிகாலத்தில் உலகம் முழுவதும் மரியாதை மற்றும் சகிப்பு தன்மை போன்றவற்றின் பிரிட்டிஷ் மதிப்பினை ஆதரிப்பதற்கு கடினமாக உழைத்தவர்” என்று தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில், மாக்டலென் கல்லூரியின் முதல்வர் இவ்வாறு மாணவர்கள் தீர்மானித்ததற்கும்  கல்லூரிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பட்டதாரி மாணவர்களுடைய அமைப்புதான் மத்திய பொது அறை. எனவே அது கல்லூரியை குறிப்பது இல்லை என்று விளக்கமளித்துள்ளார்.

அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், சில வருடங்களுக்கு முன் மாணவர்கள் தங்கள் பொது அறையில் ராணியின் படத்தை வைத்தார்கள். தற்போது அதனை அவர்களாகவே தான் அகற்ற வாக்களித்திருக்கிறார்கள். இந்த இரண்டு நிகழ்வுகளும் கல்லூரியின் தீர்மானம் இல்லை. அது மாணவர்களுக்கான அமைப்பின் தீர்வு என்று தெரிவித்துள்ளார்.

Contact Us