சூப்பர்…! ரொம்ப நல்ல ‘முடிவா’ எடுத்துருக்கீங்க…! மத்த நாடுகளும் ‘இதுபோல’ எடுக்கணும்…!

டிவிட்டருக்கு தடை விதித்த நைஜீரியாவை அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Donald Trump has welcomed Nigeria\'s ban on Twitter.

சில தினங்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் டிவிட்டர் கணக்கில் அவர் பதிவிட்ட பதிவு ஒன்றை டிவிட்டர் நிறுவனம் நீக்கியது. மேலும் தங்கள் நிறுவனத்தின் விதிகளுக்கு எதிராக அந்த பதிவு இருந்ததால் நீக்குவதாக டிவிட்டர் விளக்கம் அளித்திருந்தது..

இதனையடுத்து, அப்படி ஒரு டிவிட்டர் நமக்கு தேவையில்லை என தங்களது நாட்டில் டிவிட்டர் நிறுவனம் தடை செய்யப்படுவதாக நைஜீரிய அரசு அறிவித்தது. இதற்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் பாராட்டி தள்ளியுள்ளார். மேலும் இதுகுறித்து கூறுகையில் ‘சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்கு அனுமதியளிக்காத டிவிட்டர் மற்றும் ஃபேஸ்புக் நிருவனகளை உலக நாடுகள் தடை செய்ய முன்வர வேண்டும்’ எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக, டிரம்பின் டிவிட்டர் கணக்கை, அந்நிறுவனம் நீக்கியது அமெரிக்க அரசியலில் பயங்கர அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த நிலையில் தற்போது டிரம்ப் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us