சார்… என்ன ‘யாரு’னு நெனைச்சீங்க…? ‘ஸோ, என்ன விட்ருங்க…’ ‘பிச்சைக்காரர் சொன்ன விஷயம்…’ – அதிர்ச்சியில் உறைந்துப்போன போலீசார்…!

கன்னியாகுமரியை சேர்ந்த முதியவர் ஒருவர் சொந்த வீடு வைத்திருந்தும் யாசகம் பெற்று வாழ்ந்து வருவதாக போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Kanyakumari man owns a house and lives by begging.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தின் பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாமல் உள்ளது. அதோடு பல ஊரடங்கால் உணவு கிடைக்காமல் தவிக்கும் பிச்சைக்காரர்களை மீட்டு காப்பகத்தில் சேர்த்து உணவளிக்க நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைந்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பிச்சைக்காரர்களை மீட்டு காப்பகத்திற்கு அழைத்துச்சென்ற போது ஒரு அடி நீள கத்தியுடன் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அதன்பின் அந்த முதியவரை அழைத்து தனியாக விசாரணை நடத்தியில் அதிர்ச்சியில் இருந்த போலீசாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார் அந்த முதியவர்.

அதோடு அங்கிருந்த ஏனைய பிச்சைக்காரரர்களையும், சில மாற்றுத்திறனாளிகளையும், மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் மீட்டு காப்பகத்துக்கு அழைத்துச்செல்ல காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றினர்.

அந்த கும்பலில் இருந்த ஒரு பிச்சைக்காரர் தன் பையில் ஒரு அடி நீளத்திற்கு கத்தியும், 3 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தையும் வைத்திருந்துள்ளார். விசாரணையில் அவர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பதும் பேருந்து நிலையத்தில் தங்கி பிச்சை எடுத்து வருவதும் தெரியவந்தது.

தன்னுடைய தற்காப்புக்காக தான் இந்த கத்தியை வைத்திருப்பதாகவும், இல்லையென்றால் இரவில் அங்கு வரும் கஞ்சா குடிக்கி கும்பல் பிச்சைக்காரர்களை மிரட்டி பணம் பறிப்பதாகவும் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் போலீசாரின் அதிரடியால், ஒரே நாளில் 42 பிச்சைக்காரர்களையும் மீட்டு அபயகேந்திராவில் கொண்டு இறக்கிவிடப்பட்டனர்.

இதுகுறித்து கூறிய காவல் ஆய்வாளர் சாம்சன், இனி நாகர்கோவில் பேருந்துநிலையத்தில் பிச்சைக்காரர்களுக்கு அனுமதியில்லை என்றும் மக்களும் உதவுவதாக நினைத்து உழைக்காமல் பிச்சையெடுத்து வாழும் நபர்களை ஊக்கப்படுத்தாதீர்கள், வேலை பெற்றுக் கொடுத்து அவர்கள் பிழைப்புக்கு வழி செய்யுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Contact Us