சற்று முன்னர் ஜோ பைடன் விமானம் பிரிட்டனில் தரை இறங்கியது- மகாராணியாரையும் சந்திக்கிறார் !

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பிரித்தானியா வந்தடைந்துள்ளார். இதுவும் பாரம்பரியமாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் ஒரு நிகழ்வாக உள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நபர் பொதுவாக தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பிரித்தனையா வருவதும். வந்து மகாராணியாரைப் பார்த்து மரியாதை செலுத்திச் செல்வதும் வழக்கமாக உள்ளது. இன் நிலையில் G7 உச்சி மாநாடு பிரித்தானியாவில் கோன் வால் கடல் கரையில் நடைபெறுகிறது. இதில் ஜோ பைடன் கலந்து கொள்கிறார். அவரது ஏர் போஃஸ் 1 என்ற விமானம் சற்று முன்னர்..

பிரித்தானியாவில் உள்ள பெயர் குறிப்பிடப்படாத ரகசிய ராணுவ விமான தளம் ஒன்றில் வந்து இறங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் பாதுகாப்பான விமானமாக கருதப்படுவது ஏர்ஃபோஸ் 1 ஆகும்.

Contact Us