லண்டனில் பைடன் செல்லும் வீதிகள் எல்லாவற்றிலும் மோபைல் போன்கள் வேலை செய்யவில்லை !

பிரித்தானியா வந்தடைந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முதலில் கோன் வால் நகருக்கு சென்றுள்ளார். அவர் அங்குள்ள பாதைகள் வழியாக செல்லும் வேளைகளில், சுமார் 17 வாகனங்களும் 12 மோட்டார் சைக்கிள் பொலிசாரும் பாதுகாபிற்கு செல்கிறார்கள். இது போக அவர்கள் செல்லும் வாகனங்களில் ஒன்றில் ஜாமிங் -டிவைஸ் என்று சொல்லப்படும் மோபைல் போனை செயல் இழக்கச் செய்யும் இயந்திரம் உள்ளது. இதனால் மோபைல் போன்கள் சில நிமிடங்களுக்கு தொடர்பை இழக்கிறது. இருப்பினும் பாதுகாப்பு பிரிவினர் அதி நவீன மோபைல் போன்களையும், சாட்டலைட் போன் மற்றும் வயர்லெஸ்சை பாவிக்கிறார்கள்.

பிரித்தானியா வந்தடைந்துள்ள ஜோ பைடன், அன் நாட்டில் சேவையில் உள்ள அமெரிக்க ராணுவ வீரர்களை முதலில் சந்தித்தார். பின்னர் அமெரிக்கா எப்பொழுதும் பிரித்தானியாவுக்கு துணை நிற்க்கும் என்றும். அமெரிக்காவின் மிகச் சிறந்த நட்பு நாடாக பிரித்தானியா இருப்பதாகவும் கூறி பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் அவர் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு ஆதரவான பல முடிவுகளை எட்டுவார் என்றும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை, பிரித்தானியாவோடு ஒத்துப் போகுமாறு கூறுவார் என்றும் எதிர்பார்கப்படுகிறது. Source DM: The beast of Carbis Bay! President Biden’s 17-car motorcade charges through Cornish town complete with bulletproof limo, anti-IED jamming truck, an ambulance and dozens of heavily armed Secret Service agents.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவை அவ்வளவு எழிதில் பகைத்துக் கொள்ளாது.

Contact Us