ஜேர்மனியில் யாழ் இளம் குடும்பத்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலை!!

ஜேர்மனியில் வசித்து வந்த பருத்தித்துறை தும்பளை இளம் குடும்பத்தர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட துயரச்சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றுள்ளது. பதிவுத்திருமணம் செய்து ஐந்து மாதம் ஆன நிலையில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது, பருத்தித்துறை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த அருள்பிரகாசம் வேணுகாந்தன் [வயது 34 ] என்ற இளம் குடும்பத்தரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஆவார். தும்பளை நாவலர் விளையாட்டுக்கழகத்தின் வளர்ச்சியிலும் சமூக சேவையிலும் ஈடுபட்டு சில வருடங்களுக்கு முன்னர் ஜேர்மனிக்கு புலம் பெயர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது பதிவுத்திருமணம் செய்து ஐந்து மாதம் கடந்த நிலையில் இந்த துயரச் சம்பவம் இடம் பெற்றது.

Contact Us