நாங்க ‘டெஸ்லா’ கார் தர்றோம்…! உங்களுக்கு ‘ஐ-போன்’ வேணுமா…? இதென்ன பிரமாதம்…! ‘தங்கக்கட்டியே வாங்கிட்டு போலாம்…’ – ஆனா நீங்க பண்ண வேண்டியது ‘அது’ மட்டும் தான்…!

உலகம் முழுவதும் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் மக்களின் இயல்பு வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அதன் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் பல உலக நாடுகள் தட்டுத்தடுமாறி வருகிறது.

offers and prizes announced Hong Kong people get vaccinated

இந்நிலையில் கொரோனா வைரஸிற்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற நிலையில் பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வலியுறுத்தி வருகிறது.

ஆனால் பொதுமக்களில் பலர் தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் பயம் காரணமாக, தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் தடுப்பூசி போட்டு கொள்ள மக்களை ஊக்குவிக்க ஹாங்காங்கில் பல்வேறு சலுகைகளும் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

75 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஹாங்காங்கில் இதுவரை 15 விழுக்காடு மக்களுக்கு தான் தடுப்பூசி போட்டுள்ளனர். ஹாங்காங் பொருளாதாரம் மீண்டும் பழைய நிலைக்கு வர, மக்களிடையே கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவது அவசியமென்பதால் ஹாங்காங் நிர்வாகம் அங்கு செயல்படும் பெரு நிறுவனங்களின் உதவியை நாடியது.

அதன்மூலம், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு SUN HUNG KAI நிறுவனம் ஆகஸ்ட் 31-க்குள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு ஐபோன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல், லீ ஷா கீ ஹெண்டர்சன் நிறுவனம் தங்க கட்டிகளை வழங்குவதாகவும், குட்மேன் நிறுவனம் டெஸ்லா கார் வழங்குவதாகவும் அறிவித்துள்ளன.

அதோடு, தவிர உணவகங்களில் கட்டண தள்ளுபடி, நிறுவனங்களில் ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை என்பன உள்ளிட்ட அறிவிப்புகளையும் பல நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.

இந்த அறிவிப்புகளை அறிந்த மக்கள் நான், நீ என போட்டி போட்டுக்கொண்டு சென்றதால் மந்தமாக இருந்த தடுப்பூசி திட்டம் வேகமெடுத்துள்ளது

Contact Us